பக்கம்:நற்றிணை-2.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39s நற்றிணை தெளிவுரை போல்வன. கொள்ளான் - உடன்கொண்டு செல்லாய்ை. மனை - விட்டில் ஒழிந்த ஒய்ந்து கிடந்த பாடுபெற்று - பயனைப் பெற்று, நுங்கை வாய்வைத்து உறிஞ்சிப் பருகி: பெண்ணை - பனே. உழைகண் - அசன்ற இடத்தையுடைய. செம்மல் - தலைமை; செம்மாப்பு. கானல் கானற்சோலை, பகற்குறியிற் சந்தித்த இடம். பாள்ை - நள்ளிரவு. முனி படர் - வருத்தும் ğ, 6]I L_ILD. இறைச்சி தம் தந்தையோடு தாமும் செல்ல விரும்பியும், அவல்ை நீத்து மனையிடத்தே விடப் பெற்றதனலே அழுது வருந்திய சிறுவர்கள், பனையின் நுங்கை அருந்தி மகிழ்ச்சி அடைவர் என்றது, தலைவைேடு அவனை மணந்து மனைவி யாகி அவனில்லம் சேர்ந்து மனையறம் நடத்த விரும்பும் தலைவியானவள், அஃது வாயாமற் போயினும், தலைவியின் இல்லத்திற்கே விருந்தினன் போல் வந்து தங்கி, அவளை அவன் இன்புறுத்தினயிைன், அதற்ை சிறிது மகிழ்ச்சியேனும் அடைவள். என்பதாம். விளக்கம்: பனைநுங்கை வாய்வைத்துக் கண்ணிடத்தே உறிஞ்சிச் சிறுவர் குடித்து மகிழ்வதற்கு, பணைகொள் வெம்முலை பாடு பெற்று உவக்கும்’ என்று உரைத்த உவமை மி கவு ம் சிறப்பானது. மார்பகத்துக்குப் பனைநுங்கை உவமிப்பது மரபு: அந்த உவமையை மாற்றியுள்ளது மிகவும் சிறந்த நயமாகும். முதல் துறைக்கு, நீ யுடன்படின் அவர் இரவு நேரத்தில் நம் மனப்பாங்கில் வந்து நின் துயர்தணிப்பர் என்று குறிப்பால் உணர்த்தினதாகக் கொள்க. இரண்டாம் துறைக்கு அவன் வரைவொடு வந்தமை உணர்த்தியதாகக் கொள்க. தந்தை வேட்டம் போகியது உரைத்தது, இரவுக்குறி.ஏ.தமின்றி இனிது வாய்ப்பதைக் குறிப்பால் உணர்த்தியதுமாகும்: 'நன்மனை அறியின் நன்று' என்றதால், அறியாது திகைக்காவாறு யானே சென்று அழைத்து வருவேன் எனத் தோழி சொன்னதாகவும் கருதலாம். - - பயன் : விரைவிலே தலைவன் வரைவொடு வந்து தலைவியை மணந்து அவள் துயர் தீர்ப்பவனவான் என்பதாம். பாடபேதம் : கடுஞ்சுரு எறிந்த கொடுங்கோள் தந்தை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/402&oldid=774580" இலிருந்து மீள்விக்கப்பட்டது