பக்கம்:நற்றிணை-2.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: நற்றிணை தெளிவுரை 399 393 புதுவர் ஆகிய வரவு! பாடியவர் : கோவூர் கிழார். திணை : குறிஞ்சி. துறை : வரைவு மலிந்தது. © - - ((துவி): தலைவன் வரைவொடு வருவதனை முற்படவே கண்டறிந்த தோழி, அந்தச் செய்திய்ை மிகவும் மகிழ்ச்சியோடு தலைவியிடம் வந்து சொல்லி, நம்மவ்ர்கள் இசைவார்களோ!' என்று ஆராய்ந்து பேசுவதுபோல அமைந்த செய்யுள் இது.) நெடுங்கழை கிவந்த நிழல்படு சிலம்பின் கடுஞ்சூல் வயப்பிடி கன்றீன்று உயங்கப் பாலார் பசும்புனிறு தீரிய களிசிறந்து வாலா வேழம் வணர்குரல் கவர்தலின் கானவன் எறிந்த கடுஞ்செலல் ஞெகிழி 5 வேய்பயில் அடுக்கம் சுடர மின்னி . நிலகிளர் மீனின் தோன்றும் நாடன் இரவின் வரூஉம் இடும்பை நாம்உய வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப கமர்கொடை நேர்ந்தனர் ஆயின் அவருடன் 10 நேர்வர் கொல் வாழி-தோழி! நம் காதலர் புதுவர் ஆகிய வரவும், கின் வதுவைகாண் ஒடுக்கமும் காணுங் காலே? தெளிவுரை : தோழி! வாழ்வாயாக! நெடியவான மூங்கில் கள் உயரமாகச் செறிந்துள்ள நிழல்மிகுந்த மலையிலே, தலைச் சூலினைக் கொண்டுள்ள இளையபிடியானது, கன்றை ஈன்று வாலாமையால் வருந்தியிருந்தது. பால்மடி சுரந்த பசுமையான அதன் வாலாமையானது தீரும்படியாக, மகிழ்ச்சி மிகுந்ததாய், வெண்மையல்லாத கரிய அதன் களிருனது, வளைந்த தினைக் கதிரைச் சென்று கவர்ந்தது. அதனைக் கண்ட கானவன் எறிந்த கடுமையான செலவையுடைய எரிகொள்ளியானது, மூங்கில்கள் நிரம்பிய மலையடுக்கம் விளங்கும்படி மின்னிச் சென்றதாக, வானத்தேயுள்ள தம் நிலையிலிருந்து பெயர்ந்து வீழும் எரிமீனைப் போலத் தோன்றும் அத்தகைய நாட்டிற்குரியவன் நம் காதலன். அவர்தாம், இரவுநேரத்திலே வந்து போதலாகிய நம் துன்பத்திலிருந்து மீண்டு நாம் பிழைப்பதைக் கருதியவராக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/403&oldid=774582" இலிருந்து மீள்விக்கப்பட்டது