பக்கம்:நற்றிணை-2.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 403 கண்ட தோழிக்கு அவன்பால் ஆத்திரம் உண்டாகின்றது. அவள் அவஞ்ல் தாம் நலனழிந்த கொடுமையைக் கூறிப் பழித்துப் பேசுவதன்மூலம், அவனை வரைந்து வருவதற்கு விரையுமாறு தூண்டுகின்ருள். அவள் பேச்சாக அமைந்த செய்யுள் இது.) - யார்ை எலுவ: யாரே நீ எமக்கு யாரையும் அல்லை; நொதும லாளன! . அனத்தாற் கொண்ககம் மிடையே நினைப்பின் கடும்பகட்டு யான நெடுந்தேர்க் குட்டுவன் வேந்தடு களத்தின் முரசதிர்ந் தன்ன . 5 ஓங்கல் புண்ரி பாய்ந்தாடு மகளிர் அணிந்திடு பல்பூ மரீஇ ஆர்ந்த ஆபுலம் புகுதரு பேரிசை மாலைக் கடல்கெழு மாந்தை அன்னஎம் . வேட்டன அல்லையால், கலந்தந்து சென்மே! 10 தெளிவுரை : நண்பனே! நீதான் எமக்கு யாராகும் தன்மையை நீதான் யாரிடத்து நட்பு உடையை! எண்ணிப் பார்த்தால், நீதான் எமக்கு யாராகவும் தோன்றுவாயல்லை. அயலான் போலவே உள்ளன. நம்மிடையே உள்ளதாம் உறவைப்பற்றி நினைத்தால், அதன் தன்மையானது அவ்வாறு தர்ன் உள்ள்து. கடிய பகடாகிய யானையையும் நெடிய தேரின. யும் உடையோனகிய குட்டுவன், பகைவேந்தரை அடுகின்ற போர்க்களத்தினிடத்தே வெற்றி முரசமானது அதிர்ந்தாற் போல, ஒலியைக் கொண்ட் அல்ைகள் உயர்ந்து எழுந்து வருகின்ற கடலிலே, பாய்ந்து நீர்விளையாட்டு அயர்கின்ற பெண்கள் அணிந்திருந்த பலவான பூக்களும் வீழ்ந்து ஒன்றேடு ஒன்று கலந்துவர, அவற்றைத் தின்ற மூதாவானது, மீண்டும் தான் தங்கியுள்ள இடத்தினுட் புகர்நின்ற, பெரும்புகழுடைய மாலைக் காலத்திலே விளங்கும், கடல் வளம் நிரம்பிய மாந்தை நகரைப் போன்ற எம்மையும் நீதான் விரும்பினய் அல்லை: ஆதலின் நின்னலே யாம் இழந்துவிட்ட எம் பழைய நலனை யாவது தந்துவிட்டு நின் போக்கிலே செல்வாயாக. கருத்து: எம் நலனை நின்னல் இழந்து வாடினுேம் என்பதாம். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/407&oldid=774590" இலிருந்து மீள்விக்கப்பட்டது