பக்கம்:நற்றிணை-2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 37 சொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லெனக் கருவி மாமழை வீழ்ந்தென எழுந்த செங்கேழ் ஆடிய செழுங்குரற் சிறுதினைக் கொய்புனம் காவலும் நுமதோ?கோடேங் தல்குல் நீள்தோ வீரே! 10 தெளிவுரை: பக்கம் உயர்ந்த அல்குல் தடத்தையும்,பருத்த தோள்களையும் உடையவரான பெண்களே! அருவியின் ஒலியானது கேட்டபடியே இருக்கின்ற பெரிய மலையிடத்தே சென்று சேர்ந்து, இளங்கன்றைக் காலிலிட்ட கயிற்ருல் பிணித்துள்ள மன்றிடத்துள்ள பலாமரத்தினை இளங்கன்றை யுடைய சிவந்த நிறப் பசுவும் சென்று அடையும். அவ்விடத்தே, அப் பலாவினது வேர்ப்புறத்தே பழுத்துக் கிடக்கும் கொழுவிய சுளைகளைக் கொண்ட பெரிய பலாப் பழத்தையும் அப் பசு தின்னும். தின்றபின், மூங்கில்கள் நெருங்கிய சிறுமலைப் பக்கத்தேயுள்ள குளிர்ந்த நீரையும் பருகும். இத்தகைய வளமுடைய பெருமலைகளே வேலியாக வுள்ள இம் மலைநாட்டிடத்தே அமைந்துள்ள நமது சிற்றுார் தான் யாதோ?’ என யான் கேட்டேனுயினும், அதற்கு யாதொரு சொல்லும் விடையாகச் சொல்லாதே இருக் கின்றீர். ஆயினும், தொகுதி கொண்ட கார்மேகங்கள் கல்லென்னும் இடிமுழக்கோடும் பெயலைச் செய்தலினலே விளைந்துள்ள, செழுமையான செந்நிறம் பொருந்திய கதிர் களைக் கொண்ட சிறுதினையின், கொய்தற்கான பருவத்தைக் கொண்ட இத் திணைப்புனத்தின் காவலும் உமது தானே? இதையேனும் கூறுவீராக! சொற்பொருள் : மன்றப் பலா-மன்றிடத்துள்ள பலா; அல்லது, தழைத்துப் படர்ந்து மன்று போல் விளங்கும் பலாவும் ஆம். குழவிச் சேதா-இளங்கன்றையுடைய செந் நிறப் பசு. அறல்-அறல்பட்ட நீர். கல்லென.ஒலிமுழக் கோடுங் கூடியதாக கருவி-தொகுதி. செங்கேழ்-செந்நிறம். விளக்கம் : கன்றின் பேரிலுள்ள பாசத்தாலே அதனை நாடிவந்த சேதாவுக்கு, பலாப்பழமும் பருகுதற்கு அறல் நீரும் வாய்த்ததுபோலே, வேட்டையாடலைக் கருதியே வந்த வகிைய எனக்கும், தலைவியைக் காணலும்.அவளோடும் இன் புறுகின்ற வாய்ப்பும் கிடைத்தது என்கின்ருன் தலைவன். இது தம் உறவு ஊழானது கூட்டுவித்ததனலே வாய்த்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/41&oldid=774596" இலிருந்து மீள்விக்கப்பட்டது