பக்கம்:நற்றிணை-2.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 407 397. சாதல் அஞ்சேன்! பாடியவர் : அம்மூவர்ை. திணை: பாலை. துறை : பிரிவிட்ை ஆற்ருளாகி நின்ற தலைமகளை, வற்புரு நின்ற தோழிக்கு ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது. ((து. வி.) தலைமகன் பிரிந்து போயிருந்த காலத்திலே, அவன் பிரிவைத் தாங்கமாட்டாது வருந்திய தலைவியை, அவன் வரும்வரை ஆற்றியிருத்தலே மகளிர் கடனென வலியுறுத்தித் த்ெளிவிக்க முயன்ருள் தோழி. அவளுக்குத் தலைவி. தான் ஆற்றியிருப்பதாகச் சொல்லும் முறையிலே அமைந்த செய்யுள் இதுவாகும். | தோளும் அழியும் நாளும் சென்றென ளிேடை அத்தழ்நோக்கி வாளற்றுக் கண்ணும் காட்சி தெளவின என்கித்து அறிவு மயங்கிப் பிறிதா கின்றே நோயும் பெருகும் மாலையும் வந்தன்று 5 யாங்கா குவென்கொல் யானே ஈங்கோ சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின் பிறப்புப்பிறி தாகுவது ஆயின் மறக்குவென் கொல், என் காதலன் எனவே! தெளிவுரை நம் தலைவர் வருவதாகக் குறித்துச் சென்ற நாளும் க்ழிந்தது. அதனுலே என் தோள்களும் நலன் அழிந்து பேர்ம். நீண்ட நெறியையுடைய சுரத்து வழியை ந்ோக்கி நோக்கித் தம் ஒளியிழந்தவாய், என் கண்களும் பார்வை மங்கின. என்னைக் கைவிட்டு என் அறிவும் மயக்கமடைந்து வேருகப் போயிற்று. காமநோயானது பெருகுகின்ற மாலைப் 醬 வந்துவிட்டது. யான் எவ்வாறுதான் ஆவேனே? இவ்விடத்திலே, இதற்ை சாதல் வந்தடையும் என்பதற்கு யான் அஞ்சமாட்டேன். ஆனால், சாவின் பின்னர் வரும் பிறப்பானது வேருென்முக அமைவதாயின், என் காதலனை அப்பிறப்பிலே மறந்துவிடுவனே என்றே யான் அஞ்சாநிற்பேன் என்பதாம். - t - கருத்து; அவனன்றி எனக்கு வாழ்வில்லை என்பதாம். சொற்பொருள் வாள் அற்று ஒளியிழந்து. தெள்வின . பொலிவிழந்தன. பிறிது ஆகின்று - வேருகின்றது: அஃதாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/411&oldid=774602" இலிருந்து மீள்விக்கப்பட்டது