பக்கம்:நற்றிணை-2.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 நற்றிணை ெதளிவுரை பித்தாகிப் போதல். ஈங்கோ - இவ்விடத்திலோ; என்றது இந்த உலகிலே இப்ப்ோது பெற்றுள்ள் பிறப்பினைக் குறித்துக் கூறிய தாகும். பிறப்பு பிறிது ஆகுவது - பிறப்பு வேருென்முக நேர்வது; இது மக்கட் பிறப்பன்றி வேறு உயிர்வகைகளுட் சென்று பிறத்தலும்; மக்கட் பிறப்பாயினும் நெடுந்தொலைவு இடைப்பட்ட வேற்று நாடுகளிற் சென்று பிறத்தலும் போல்வன. விளக்கம் : அவர் வரவில்லை, என் நலன்கள் அழிந்தன, நோய் பெருகுதற்குரியதான மாலைக்காலமும் வந்தது. இனி எவ்விதம் ஆற்றியிருப்பேனே என்று துயருற்றதாம். சாதல் அஞ்சேன் என்றது, அதுதான் தனக்கு நேரப்போகின்றது என்ற வெறுப்பிடையிலே கூறியதாம். பின் பிறப்பில் இவன் காதலன் என்பதனை என் பிறப்புச் சார்ந்த அறியாமையால் மறப்பேனே என்றே அஞ்சுவேன் என்றது, அவளது கற்புச் செவ்வியை உணர்த்தும். கண்கள் ஏக்கத்தாலும் நோக்கி நோக்கி உண்டாகும் சோர்வாலும் ஒளியிழந்துபோகும் என்பது இயல்பு. என் கண்ணே நோக்கி நோக்கி வாழ் இழந்தனவே எனக் குறுந்தொகையுள்ளும் (44) வருவது காண்க. இம்மை மாறி மறுமையாயினும் நீயாகியர் எம் கணவனை, யாளுகியர் நின் நெஞ்சு நேர்பவளே (49) என அம்மூவனர் பிறிதோரிடத்தும் தமிழ் மகளிரின் கற்புளப் பாங்கினை எடுத்துச் சொல்வர். பயன் : தன் ஆற்ருமை தீரத் தலைவி மேலும் சில நாட்கள் பொறுத்து ஆற்றியிருப்பாளாவள் என்பதாம். பாடபேதம் : ஆசிரியர் பெயர் கழார்க்கீரன் எயிற்றியார் எனவும் சில ஏடுகளிற் காணப்படும். 398. சொல்லாள் சிலவே! பாடியவர் : உலோச்சனர். திணை : நெய்தல். துறை : முன்னுற் உணர்ந்து பகற்குறி வந்து மீளும் தலைமகனை, நீதான் இவளது தன்மையை ஆற்றுவி எனச் சொல்லியது. w ((து . வி.) தலைவன் களவொழுக்கத்தினையே நாடி வருத லன்றி, முறையாக மணந்து கொள்வதிலே நாட்டமில்லாமல் இருப்பதறிந்து தோழி கலங்குகின்ருள். பகற்குறி நாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/412&oldid=774604" இலிருந்து மீள்விக்கப்பட்டது