பக்கம்:நற்றிணை-2.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 நற்றிணை தெளிவுரை சொற்பொருள் : உருகெழு - அச்சம் செய்யும். தெய்வம் . தெய்வங்கள்; இவை ம்ாலை மயங்கும் வேளையிலே காட்டுச் சோலைகளிலே திரிந்தபடி இருக்கும் என்பது பழைய நம்பிக்கை. குடக்கு வாங்கல் - மேற்றிசையில் மறைந்து போதல். கூழை - பெண்கள் தலைமயிர்; குட்டையான மயிரும் ஆம் வயிறு அலைப்ப-வயிறு பசியால்ே வருத்தம் செய்ய நேரமாயிற்றென்று வயிற்றில் அடித்தபடி எனலும் பொருந்தும். பழிச்சி - பாராட்டி: 'பொழில் பழிச்சி பொழிலிடத்துத் தலைவியைப் பாராட்டி: பொழிலுற்ை தெய்வத்தைப் போற்றி எனினும் ஆம். யாணர் இளமுலை - பார்க்குந்தோறும் புதிதுபுதிதாக அழகுடைத் தாகத் தோன்றும் இளமுலை. விளக்கம் : ஒரை மகளிர் என்றது, ஒரையாடியிருந்த சிறுமியர் என்ப்தாம். இவர் மாலை மயங்கியதும், அன்னமார் சினந்துகொள்வாரே எனத் தம் வயிற்றலடித்தபடி ஊர்நோக்கி ஒன்றுசேர்ந்து செல்வராயினர் என்றனள்; ஆகவே, யாம் ஊர் செல்லாதிருப்பின் அன்னையின் கோபத்துக்கு ஆளாக, அதல்ை இற்செறித்தலும் பிறவும் நேரும் என்றனளும் ஆம். தலைவி அழுதது, பிரிவைப் பொருமையாலும், பிரியாது இன்புற்றிருக்கத் தலைவன் மணந்து கொள்ளற்கு முற்பட்டா னில்லையே என்ற ஏக்கத்தாலும் ஆம். - - பயன் தலைமகளது ஆற்ருமை மிகுதியை உணர்பவன், அவ்ளை மணந்து கொள்ளலிலே மனம் விரைபவனவான் என்பதாம். 399. நயந்தனன் فعوله பாடியவர் : தொல்கயிலர். திணை : குறிஞ்சி. துறை : (1) நெடுங்காலம் வந்து ஒழுக ஆற்ருமை வேறுபட நின்ற தலை மகளைத் தோழி, எம்பெருமான் இதற்காய நல்லது புரியும்’ என்று, தலைமகன் சிறைப்புறத்தானகச் சொல்லியது; (2) இதற்காய நல்லது புரியும் பெருமான் திறம் வேண்டும்' என்ருட்குத் தலைமகள் சொல்லியது.உம் ஆம். ((து-வி.) களவொழுக்கத்திலே நெடுங்காலம் ஒழுகி வந்த தலைவனின் போக்கினைக் கண்டு, அதனல் வருந்தி நலிந்து மெலிந்த தலைவியைக் கண்டு மனங் கலங்கிய தோழி, அவன் வந்து ஒருசார் நிற்பதறிந்து, அவன் தக்கது செய்வான் என்று ·Ꮬ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/414&oldid=774608" இலிருந்து மீள்விக்கப்பட்டது