பக்கம்:நற்றிணை-2.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பு-1 234. ஆம் செய்யுள் காணுமற் போன இச் செய்யுள், குறுந்தொகையுள் 307 ஆம் செய்யுளாக அமைந்துள்ள ஒன்பதடிச் செய்யுளாக இருக்கலாம் என்று, முன்னர்க் (பக்கம் 80 இல்) கூறினேம். அச் செய்யுள் இது. - • மறந்தனர் கொல்லோ தாமே! பாடியவர் : கடம்பனூர்ச் சாண்டிலியன். தின : பால. துறை : பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - - ((து-வி.) தலைவன் பிரிந்து போயின காலத்தில், தலை மகள் அவனே நினைவாகப் பெரிதும் வாடி நலன் அழிகின்றனள். அவள் நிலையைக் காணப் பொருத தோழி, நின் இச்செயல் நன்றன்று' என்று கடிந்து கொள்ளுகின்ருள். அவளுக்குத் தலைவி தன்_நிலையைச் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.) வளையுடைத் தனைய தாகிப் பலர்தொழச் செவ்வாய் வானத்து ஐயெனத் தோன்றி இன்னப் பிறந்தன்று பிறையே அன்னே. மறந்தனர் கொல்லோ தாமே-களிறுதன் உயங்குநடை மடப்பிடி வருத்தம் கோனது 6 நிலையுயர் யாஅம் தொலையக் குத்தி வெண்கார் கொண்டு கைசுவைத் தண்ணுக்து அழுங்கல் நெஞ்சமொடு முயங்கும் அத்த நீளிடை அழப்பிரிங் தோரே! தெளிவுரை : தோழி! பிறையானது வளையை உடைத்தாற் போன்ற வளைவினை உடையதாகிக் கன்னிப் புெண்கள் பலரும் 、ベ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/419&oldid=774617" இலிருந்து மீள்விக்கப்பட்டது