பக்கம்:நற்றிணை-2.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

as: . . . . . நற்றிணை தெளிவுரை தெண்மணி இயம்பும் ஈகாண் தோன்றும் எம் சிறு நல் ஊரே' என்னும் சொற்கள், இவர் ஆவூரினர் என்பதற்குச் சான்ருகவும் கொள்ளப்படும். மழையில் நனைந்த கூந்தலை விரித்து உலர்த்து கின்ருள் தலைவி; அதன் அணிகிளர் கலாவம் ஐது விரித்து இயலும் ம்ணிபுரை எருத்தின் மஞ்ஞை போல'என்ச் சொல்லிய சிறப்பினர் இவர். . இடைக்காடர்ை 221, 316 இவர் இடைக்காடு என்னும் ஊரினர். இவ்வூர் தென்றமிழ் நாட்டுள்ளதோர் ஊர். இவர் வேறு; இடைக்காட்டுச் சித்தர் வேறு. இவர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் காலத் தவர். முல்லைத்திணை இவருக்கு நிரம்பவும் பிடித்தமானது. மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி, நிலவரை இழிதரும் பல்யாறு போலப் புலவர் எல்லாம் நின் நோக்கினரே (புறம்42) என்று வளவனின் வண்மையை இவர் வியந்து போற்றுவதால், இவரைச் சோணுட்டு இடைக்காட்டினர் என்பாரும் உளர், இச் செய்யுட்களுள் இவர் காட்டும் தாய்மை ஒவியமும் (221), ‘மணிநிற எழிலி மடவது எனத் தோழி தலைவியைத் தேற்றும் திறமும் நயமுடையனவாம். - : இளநாகனர் 205, 231 இவர் நாகன் என்னும் பெயரினர்; இளமை இவரைப் பிறரின் வேறுபடுத்த வந்த சொல் ஆகும், பிறரின் இளமை யுடையவர் இவர் என்றற்கு. நாகர் குடியைச் சேர்ந்த இளைஞர் என்றும் கருதலாம். மையற விளங்கிய மணிநிற விசும்பின் கைதொழு மரபின் எழுமீன் போல' என்று இவர் கூறுகின்ருர் (231). எழுமீன் என்பது சப்தரிஷி மண்டிலம் எனப் பெறுவது; அதனுள் ஒன்ருன அருந்ததி போற்றுதல் தமிழ் மரபு: பிறரை யும் போற்றும் மரபும் உண்டென்று இதல்ை அறியலாம். 'சப்த கன்னியர் 'ஏழு கன்னிமார் என்று இம்மரபு இன்றும் தமிழகச் சிற்றுார்களில் வழிபடும் தெய்வமரபாக நிலவுகின்றது. :புன்னை பூப்பூத்து விளங்குவது குருவி முட்டைகளை உடைத்துப் போட்டாற்போல விளங்கும் என்பதும் நல்ல உவமையாகும். ஆளி நன்மான் (205) என இவர் உரைப் பதல்ை, இவர் காலத்தே ஆளி என்னும் விலங்கு தமிழ்நாட்டுக் காட்டுப் பகுதிகளில் வாழ்ந்தமையும் அறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/426&oldid=774631" இலிருந்து மீள்விக்கப்பட்டது