பக்கம்:நற்றிணை-2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

39


214. அவரும் கேளாரோ தோழி!

பாடியவர்: கருவூர்க் கோசனார்; திணை: பாலை. துறை: உலகியலாற் பிரிவு உணர்த்தப்பட்ட தலைவன் குறித்த பருவங் கண்டு, தலைமகள் சொல்லியது.

[(து. வி.) உலகியல் வாழ்விற்கான பொருளைத் தேடி வருவதன் பொருட்டாகப் பிரிந்த தலைமகன், பிரியுங் காலத்தே மீண்டும் வருவதாகச் சொல்லிச் சென்ற பருவத்தினது வரவைக் கண்டாள் தலைவி. அவள் மனவேதனையை. உணர்த்துவது போல அமைந்தது இச்செய்யுள்.]

‘இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் அசையுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வு இன்ம்’ என, வினைவயிற் பிரிந்த வேறுபடு கொள்கை ‘அரும்பவிழ் அலரிச் சுரும்புண் பல்போது அணிய வருதும்நின் மணியிருங் கதுப்பு’ என, 5 எஞ்சா வஞ்சினம் நெஞ்சுணக் கூறி, மைசூழ் வெற்பின் மலைபல இறந்து, செய்பொருட்கு அகன்ற செயிர்தீர் காதலர் கேளார் கொல்லோ தோழி! தோள இலங்குவளை நெகிழ்த்த கலங்களும் எள்ளி 10 நகுவது போல மின்னி ஆர்ப்பது போலுமிக் கார்ப்பெய்ல் குரலே!

தெளிவுரை: “தோழி! இம்மையிலே சிறந்ததாகிய புகழும், இல்லறம் ஆற்றலாகிய இன்ப வாழ்வும், மறுமைக்கு இன்பந் தருதலாகிய கொடையும் என்னும் மூன்றும், ஒருவனுக்கு இன்றியமையாதனவாகும். செயல் அற்றவராகச் சோம்பி இருந்தோர்க்கு இம்மூன்று பயன்களும் அரிதாகக் கூட வந்தடைவதில்லை” எனத் தலைவனும் கருதினார். அதனாலே, வினை செய்தலின் பாற் பிரிந்த வேறுபட்ட கோட்பாட்டினரும் ஆயினார். அப்படிப் பிரியுங் காலத்திலே, “நின்னது நீலமணியைப் போன்றதான கரிய கூந்தலிலே, கார் காலத்தே அரும்பு விரிகின்ற, சுரும்புகள் தேன் உண்ணா நிற்கும் பல வகையான மலர்களையும் அணிந்து இன்புறும் பொருட்டாக யானும் வருவேன்” என்று, குறையற்ற வஞ்சினத்தினை என் நெஞ்சமும் ஏற்றுக் கொள்ளு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/43&oldid=1509679" இலிருந்து மீள்விக்கப்பட்டது