பக்கம்:நற்றிணை-2.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடிய சான்ருேர்கள் 427 அனைத்தும் தமிழறிவோடு சேர்ந்து அமைந்த உருவமாக விளங்கிய உயர்ந்தோர். இவர். பெண்ணினத்தின் உயர்வுக்கு என்றும் இலக்கியமாகித் தொழுது போற்றும் உயர்வும் கொண்டு விளங்குபவர். இவருடைய 295 ஆம் செய்யுள் வேறு பல்நாட்டிற் கால்தர வந்த பல்வினை நாவாய் தோன்றும் கடற்றுறையைக் காட்டுகின்றது. இளநலம் இற் கடை ஒழியச் சேறும்-வாழியோ-முதிர்கம் யாமே என்று தலைவி வருந்தும் வருத்த மிகுதியை உணர்ந்து நினைக்க வேண்டும். 'அருந்துயர் உழத்தலின் உண்மை சான்ம்' என்பது 381 ஆம் செய்யுளில் வரும் பொன்மொழி. அஞ்சியின் வள்ளன்மையும், இச் செய்யுளில் ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்கத் தேர் வீசு இருக்கை' என அவன் அரசிருக்கையினைக் கூறு வதனால் காட்டப் பெறும். இவ்வாறு உலகியல் அறநெறி காட்சி நயம் தமிழினிமை அனைத்தும் செறிந்தவை இவர் செய்யுட்கள். கச்சிப்பேட்டு இளந்தச்சனர் 266 காஞ்சியை அடுத்திருந்த ஒர் ஊர் கச்சிப்பேடு. இவ்வூர வராக, இளந்தச்சனர், பெருந்தச்சனர், காஞ்சிக் கொற்றனர், நன்னகையார் போன்ற புலவர்கள் பலரைக் காணலாம். தச்சுத் தொழிலுடன் தமிழ்வளமும் கொண்டிருந்த சான்ருேர் இவர் என்பதைப் பெயரே உண்ர்த்தும். வேறுபட்டு இரீய காலை இரியின், பெரிய அல்லவோ பெரியவர் நிலையே' என்பது சிந்தனைக்குரிய செழுயைான தொடர் ஆகும். கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனர் 213 இவரும் கட்சிப் பேட்டினர்; தச்சுத் தொழிலினர்; ஆண்டால் இளந்தச்சனரினும் பெரியவர். தலைமகன் வந்து புதியவன்போலச் சொல்லர்ட முயன்று, அவள் பேசாதிருக்க, மேலும் கூறுபவகை, காதலும் நுமதோ? என அமைந்துள்ள இச் செய்யுள் நயமும் செறிவும் மிகுந்ததாகும். 'இளந்தச்சு’ சிறு தொழிலெனவும், பெருந்தச்சு தேர் வேலையும் பிறவு மான நுட்பமான மரத்தொழில் எனவும் கருதுவர். கணி புன்குன்றனர் 226 கணியன் பூங்குன்றனர் எனவும் இவர் பெயர் வழங்கும். இவரைப் பாரியின் பறம்பு நாட்டைச் சேர்ந்த பூங்குன்ற்த்தினர் என்பார்கள். வானியலில் வல்லவராதலின் கணி எனப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/431&oldid=774644" இலிருந்து மீள்விக்கப்பட்டது