பக்கம்:நற்றிணை-2.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடிய சான்ருேர்கள் - 429 இசைபட வாழ்பவர் செல்வம் போலக் காண்டொறும் பொலியும்'-217. முள்ளுர் மலையனின் கொடைத்திறம் பற்றி 290 ஆம் பாடல் கூறுகின்றது: ஒரியைக் காரி கொன்றதை 320 ஆம் செய்யுள் காட்டும்; பன்றிக் கறியைக் குடிமுறை பகுக்கும் மனையோளை 336 காட்டுகின்றது; மந்திக்கு விருந்து செய்யும் குறமகளை 353 இல் காணலாம்; காந்தள் தாது மேலே விழ, வீடு திரும்பிய பசுவை அதன் கன்றே இனங்காணுது மயங்குகிறது 359 இல்: 476 கிளிவிடு தூதாக :ே - கயமஞர் 279, 293, 30, 324 இவர் குறுந்தொகையின் ஒன்பதாம் பாடலுள் சொல்லிய நயமான உவமைபற்றி இப்பெயர் பெற்றவர் எனலாம். சங்க நூற்களுள் 25 செய்யுட்கள் இவர் பெயரால் காணப்படும். மகட்போக்கிய தாயது புலம்பலாகவே பல செய்யுட்களும் காணப்படுவதனால், இவர், அத்தகு தாய்மாரின்பால் இர்க்க நெஞ்சம் உடையவராதல் பொருந்தும். இச் செய்யுட்களும் அத்துறையினைச் சார்ந்தவையே யாகும். சிலம்பு ಕಣ್ಣಿ செல்வம் பிறருழைக் கழிந்த என் ஆயிழை அடியே (279) என்புதல்ை,பெண்கள் திருமணத்திற்கு முன்பாகச் சிலம்புகளைக் கழற்றிவிடுகின்ற தமிழ் மரபைக் காணலாம். தாய்மையின் சோகச்சித்திரங்களாக விளங்கும் செய்யுட்கள் இவை. தன் மகளின் நல்வாழ்விலேயே மனம் ஈடுபட்ட தாய், அவள் தன் காதலனுடனே வீட்டை விட்டு iெளியேறிப் போனபேர்து, அஃது அறத்தொடு பட்டதென்று நினைத்தாலும், பாசத்தால் துடித்துப் புலம்புகின்றனள். கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனர் 343 கருவூரினர் இவர். கதப்பிள்ளை என்பார் குறுந்தொகையுள் 64, 265, 38 ஆம் செய்யுட்களைச் செய்தவர். அவர் மகனர் இந்தச் சாத்தனர் ஆகலாம். கடவுள் தங்கும் ஆலமரத்தடியிலே பலிச்சோறிட்டுப் போற்றுவதையும், அப்பலியைக் காக்கை உண்டுபோதலையும் இச் செய்யுள் காட்டும். கணவர் வரவை அறிவித்த காக்கைக்கு இப்படிப் பலியிட்டுப் போற்றுவது பழையகாலத் தமிழ்மகளிர் மரபாதலையும் காணலாம். இன்றைக்கும் காக்கைக்குச் சோறிட்டே உண்பது என்பது பல தமிழ்க் குடும்பங்களின் மரபாகும். அதுவும் சிறப்பு நாட்களில் காக்கை புலிச்சோற்றை உண்டால்தான், பின்ன்ர், தெய்வம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/433&oldid=774648" இலிருந்து மீள்விக்கப்பட்டது