பக்கம்:நற்றிணை-2.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 நற்றிணை தெளிவுரை ஏற்றதெனக் கருதித் தாம் உண்பார்கள். இந்தத் தமிழக மரபைக் காட்டியவர் இவர். - கருவூர்க் கோசர்ை 214 இவர் கருவூரினர். கோசனர் என்னும் பெயரினர். கோசிகனர் என்பதே கோசரைாக மருவியது என்பாரும் உளர். கோசம் ஆடை வகையுள் ஒன்றென்பதும், அதனை நெய்யும் தொழிலோர் கோசனர் எனப் பெயர் பெற்றனர் எனவும் உரைப்பர். கோசர் என்னும் இனத்தவர் இவர் என்று சொல்வதும் பொருந்தும். வாய் மொழிக்கோசர் என்னும் பழைய இனத்தை இவர் சார்ந்தவராகலாம் என்பதே ஏற் புடைத்தும் ஆகும். இவருடைய கருவூர் கொங்கு வஞ்சி எனப் புகழோடு திகழ்ந்த இந்நாளைய தாராபுரம் என்றும் கொள்வர். 'இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் அசைவுடன் இருந்தோர்க்கு அரும் புணர்வின என்பார் இவர். இதல்ை, . வினவயிற் பிரிந்து போதல் பண்டை நாள் ஆடவர் களிடையே வழங்கிய உலகியல் அறம் என்பதை இச் செய்யு ளால் அறியலாம். கழாஅர்க்கீரன் எயிற்றியர்ை 281, 282 § இவர் பெயர் எயிற்றியனர் என்பது. இது எயிற்றியார் என்றும் வழங்கும். சோணுட்டுக் காவிரியின் வட கரையிலுள்ளதாயிருந்த கழார்ப் பெருந்துறை கழார் முன்றுறை என்னும் கடற்கரையூராக இருந்த ஊரினர். இந்நாள் அது அழிந்து போய்விட்டது. எனினும், களார்க் கூற்றம்' எனும் பெயர் பல கல்வெட்டுக்களில் காணப்படு கின்றது என்பர். ஒருகாலத்து மத்தி' என்பானுக்கு உரியதாக இருந்தது இது. இம் முன்துறையிலேயே புதுநீர்விழா ஆடிய போது ஆட்டனத்தியைக் காவிரி இழுத்துச் சென்றது. "கீரன்’ என்பது இவர் தந்தை பெயர் ஆகலாம். எயிற்றியார் என்ப்வர்கள் இவரைப் பெண்பாலராகக் கொண்டு "கீரன் கணவர் பெயர் என்று கருதுவர். இவர் பாடிய பிற பாட்டுக்களைப் பிற சங்க நூற்களிலும் காணலாம். இவரை எயிற்றியார் என்றே குறுந்தொகையும் அகநானூறும் காட்டும். காக்கை கழார்க் கொள்ளும் சோற்றுப் புலிக்காகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/434&oldid=774650" இலிருந்து மீள்விக்கப்பட்டது