பக்கம்:நற்றிணை-2.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 " - நற்றிணை தெளிவுரை காட்டுவர்.'மங்கலம்-இறையிலியாக அளிக்கப்படும் ஊராகும். "கிள்ளி மங்கலம்' என்பது கிள்ளியின் பெயரால் அளிக்கப்பெற்ற ஊரென்று காட்டும். கிழர் வேளாண்குடியென உணர்த்தும். சோகோவனர் இயற்பெயராகவும் காரணப் பெயராகவும் கொள்ளலாம்; சிலர் சேரகோவனுர் எனவும் கொள்வர். இச் செய்யுள் வரைகடந்த வேதனையாலே துடிக்கும் பெண், மரபு கடந்த செயலையும் செய்வோமா என நினைக்கின்றதன் எல்லையைக் காட்டுகின்றது. நீ சான்ருேன் அல்லன் என்று சொல்லிவர அவனுர் போவோமா? என்று கேட்கும் உள்ளத்திலே கனன்று எழும் துயரத்தீயை நாம் நினைக்கும்படி செய்துவிடுகின்ருர் இவர். - குடவாயிற் கீரத்தனர் 212, 379 r தஞ்சை மாவட்டக் கொடவாசல் ஊரினர் இவர். இவர் கழுமிலப் போரைப்பற்றிப் பாடியவர். சோழர் குடந்தைக்கண் வைத்த பெருநிதியும் இவராற் குறிக்கப்படும். நக்கீரர் போன்ற பெரும்புலவர்கள் காலத்தவர். பார்வைப் புள் வைத்து வேடர்கள் பறவைகளைப் பிடிப்பதைப்பற்றி 212ஆம் செய்யுளில் இவர் கூறுவர். பம்பை என்னும் பழைய தோல்வாத்தியக் கருவிபற்றிய குறிப்பையும் இச்செய்யுளிற் காணலாம். தேர்வண் சோழர் குடந்தை வாயில் என்று 379ஆம் عمبر " ممي. செய்யுளில் இவர் குறிப்பிடுவது கொண்டே இவர் பெயர் குடவாயிற் கீரத்தனர் என வழங்கப் பெற்றதாகவும் கூறலாம். வயிற்றில் அடித்துச் சிவந்த கைவிரல்கள் காந்தள் பூக்கள் போன்று விளங்கும் என்பது சிறந்த உவமையாகும். குண்டுகட் பாலியாதனர் 220 ° Ý · 'பாலியாதனர் என்னும் பெயரினர். ஆதன் எனப் பெய ருடையோர் பலர்; அவருள் 'பாலியாதன்' என இவர் சிறப்பிக்க பெறுகின்றனர். பாலிபாழியின் சிதைவெனக் கொண்டு பாழிப் பகுதியினர் என்பர் சிலர். குண்டு கண்' என்பது உறுப்பமைதி யால் வந்த பெயரும் ஆகலாம், செங்கண் காரிக்கண் போன்று. இச் செய்யுளில் வரும் நகைச்சுவை வியக்கத்தக்கது. சிறுகுறு மாக்கள் பெரிதும் சான்ருேர் என்பது அது. பிறர் சான்ருேர் ஆகார் என்பதும் அதன் கருத்தாகலாம். - - குதிரைத்தறியனர் 296 குதிரைத் துறையனர் என்றும் இவர் பெயரைக் கூறுவர். திறையனர் என்பாரும் உளர். இவர் குதிரைமலைப் பகுதியினர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/438&oldid=774657" இலிருந்து மீள்விக்கப்பட்டது