பக்கம்:நற்றிணை-2.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடிய சான்ருேர்கள் - 435. என்பவர் மற்றும் சிலர். ஆனால், இவர் பழங்காலத்துக் கடற்கரையிலே வந்து இறங்கும் குதிரைகளை வாங்கி விற்கும். தொழிலுடையவராயிருந்தனர் எனலாம். பழங் கால மெசபொட்டேமியா அசிரியாப் பகுதிகளிலிருந்து ஏராளமான குதிரைகளைத் தமிழ் அரசர்கள் தம் படையணிகளுக்கு இறக்குமதி செய்தனர் என்பதனால், இவர் அத் தொழில் நில்விய கடற்றுறையுள் ஒன்றில் இருந்தவர் என்றே கருதலாம். "வினையே நினைந்த உள்ளம் என்னும் இவர் வாக்கின் இச் செய்யுளில் காண்லாம்; மிகச் செறிவான சொற்ருெடர் அது. குளம்பர்ை 288 இவர் பெயர் குளம்பனர் என்பது. குளம்பாதாயனர் என்று மற்ருெரு சான்ருேர் பெயரும் காணப்படும். குறிஞ்சிப் பாடல் இது. இதன்கண் மகளது களவு உறவினை அறியாளாய் அன்னை கட்டுக்காணும் மரபு விளக்கப் படுகின்றது. செம்முது பெண்டிரொடு என, அன்னை தன் உதவிக்குக் கொள்வோரது திறமும் காட்டப்படுகின்றது. குறமகள் குறியெயினி 357 எயினர் மரபினர் இவர். எழினி’ என்பது குறவர் (எயினர்) குடியினர்களுள் சிலரது பெயராகவும் வழங்கும். குறி எயினி என்பதில் வரும் குறி என்பது குறிப்பு'என்று பொருள்படும். இச் செய்யுளில் வரும் என் குறிப்பு என்னெடுநிலையாதாயினும்: என்ற தொடரால் இவர் இப்பெயர் பெற்றனர் எனவும் கருதலாம். இக் குறிஞ்சித் திணைச் செய்யுள் பெண்ணின் மனவுறுதியைச் சிறப்புறக் காட்டுவதாகும். சாரல் நாடனெடு ஆடிய நாளே...என்னெடு நிலையாதாயினும், என்றும் நெஞ்சு, வடுப்படுத்துக் கெட அறியாதே' என்று தலைவி கூற்ருக இவர் காட்டுவது காணலாம். குன்றியர்ை 239 இவர் பாடிய செய்யுள் மற்ருென்றை (நற் 117) நற்றிணை முதற்பகுதியுள் காணலாம். குறுந்தொகையுள் 6 செய்யுட்கள் காணப்படும். தொண்டிப் பகுதியினர் இவர் எனவும் சிலர் கருதுவர். நெய்தல் திணைச்செய்யுளான இது தோழி கூற்முக மிகவும் இனிமைசெறிய அமைந்த சிற்ப்பினதாகும், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/439&oldid=774659" இலிருந்து மீள்விக்கப்பட்டது