பக்கம்:நற்றிணை-2.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடிய சான்றேர்கள் - 69? கிழார் மகனர் பெருங்கொற்றனர் எனவும், செல்லூர்க் கொற்றனர் எனவும் வழங்கும் வேறு புலவர்களும் காணப் படுவர். கொற்றம் உடையவர் என்பதல்ை கொற்றங் கொற்றனர் எனக் குறிக்கப் பெற்றிருக்கலாம். இக் குறிஞ்சிச் செய்யுள் செறிப்பு அறிவித்து வரைவு வேட்டலாக அமைந்த சிறந்த செய்யுளாகும். பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை’ என்று, இவர் களவுக் காதலை வியந்து கூறுவர். கோட்டியூர் கல்லங்தையார் 211 கொட்டியூர் நல்லெந்தையார் எனவும் இவர் பெயர் காணப் படும். கோட்டியூர் பாண்டிநாட்டுச் சிறப்புட்ன் விளங்கிய ஊர் களுள் ஒன்ருகும். நல்லந்தையார் என்பது நல்லன் தந்தையார் என்று பொருள்கொள்ளற் குரியது என்பர். நல்லந்தை' என்பது பெண்பாற் பெயரெனவும் கொள்வர். இச் செய்யுள் நெய்தல் நிலத்தை நன்கு ஓவியப்படுத்தும். நீர்க்குருகின் குத்துக்குத் தப்பிய இருமீன், தாழை முகையைக் கண்டு வெருவி ஓடும் என்று மிக நயமாகக் கூறுவதைக் காணலாம். கோவூர் கிழார் 393 தொண்டைநாட்டுக் கோவூரினர் இவர். சோழன் நலங் கிள்ளி, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் காலத் தவர். இவருடைய புறப்பாடல்கள் 15 உம் சரித்திரச் சிறப் புடையனவாகும். அஞ்சாமையுடன் உண்மையை எடுத் துரைத்து அறம்பேணும் மனத்திறன் பெற்றவர் இவர். இது குறிஞ்சிச் செய்யுள். களவுக் காதலர் அவர்கள்; அவன் புதியவன் போல வரைவுவேட்டு வருகின்ருன் போலவும், வதுவை நாளன்று அவள் நாணத்தோடு ஒடுக்கமாக இருப்பது போலவும் மனக்கண்ணிற் கண்டு தோழி கூறுவதில் நகைச் சுவையும் ஆர்வமும் மரபும் ஒளிசெய்யக் காணலாம். கோளியூர்கிழார் மகளுர் செழியனர் 383 செழியனர் இவர் பெயர். கோளியூர் கிழார் மகளுர் இவர். வேளாண் தொழில் செய்து சிறந்தவர். இவர் பாண்டிய நாட்டார் என்பது தம் மகனுக்குச் செழியன் எனப் பெயரிட்டத ஞலேயே அறியத்தகும். கோழியூர் என்பதே கோளியூர் என 'ழ'கரம் பேதப்பட்டதாகலாம். 'கொடிய இரவிலே காட்டுவழி வருகின்ற நீதான் எமக்கு அருளினவன்போன்று தோன்றினும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/441&oldid=774665" இலிருந்து மீள்விக்கப்பட்டது