பக்கம்:நற்றிணை-2.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 நற்றின தெளிவுரை இணைதல் என்று தலைவியின் நிலையைக் குறிப்பது உள்ளத்தில் நிலைக்கும் சோக ஒவியமாகும். குமிழம்பூ காற்றிலாடுவது, மகளிர் காதுகளில் அணிந்துள்ள குழைகள் ஆடுவதுபோன் றிருக்கும் என்பது அழகிய உவமையாகும். - தேய்புரிப் பழங் கயிற்றிஞர் 284 இச் செய்யுளில் வரும், தேய்ப்புரிப் பழங்கயிறு போல வீவது கொல் என் வருந்திய உடம்பே' என்னும் நயமிக்க தொடரால் பெயர் பெற்றவர் இவர். செய்வினை முடியாது எவ்வம் செய்தல், எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என்பது இவருடைய, மறக்கமுடியாத மற்ருெரு பொன்மொழி போன்ற தொடராகும். - தேவர்ை 227 இவரைப் பூதன் தேவனர் என்பர் சிலர். தேவன் என்னும் பெயர் வழக்கு இவரைத் தேவகோட்ட வழிபாட்டுத் தொடர் பினர் என நினைக்கவும் செய்யும். இப்பாடலுள் பசும் பூண் சோழர் கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்' என்று இவர் கூறுவ்தல்ை, இவரைத் தொண்டைநாட்டு ஆர்க் காட்டினர் எனக் கொள்வதும் பொருந்தும். * தொல் கபிலர் 276, 328, 399 கபிலரினும் பழைமை வாய்ந்தவர் இவர். நற். 114 ல் புள்ளித் தொல்கரை எனக் கூறிய நயத்தால் இப் பெயர் பெற்றனர் என்றும் கருதுவர். இல்லுறை கடவுட்கு மகளிர் பலியிடும் வழக்கம் இவருடைய அகநானூற்றுச் செய்யுளால் அறியப்படும். பழங்கால மக்களுடைய வழக்காறுகள் பல வற்றையும் இவர் தம் செய்யுட்களுள் எடுத்துக் காட்டுவர். குறவர் மகளிரேம் குன்றுகெழு கொடிச்சியேம் (276) வாங்கு அமைப் பழுநிய் நிறவு (27) என்றெல்லாம் ஒலிச்சிறப்பும் கருத்துவள்மும் இவர் வாக்கில் அணிபெற இணைந்து நடனமிடும். கலம் பெறு விறலி, வெண்கிழி வேண்டாது ஆடும் காட்சி (328) யும் இவர் செய்யுளிற் காணப் பெறும். நக்கீரனர் 258.340, 358, 367 இவர் கணக்காயனர் மகளுர் நக்கீரனர் என்னும் சிறப் 's புடையோர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/444&oldid=774671" இலிருந்து மீள்விக்கப்பட்டது