பக்கம்:நற்றிணை-2.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* UT4ು சான்றேர்கள் 441 செழியன் காலத்தவர். உண்பது,நாழி, உடுப்பவை இரண்டே, பிற்வும் எல்லாம் ஒரொக்கும்மே (புறம் 189) என்று சமத்துவக் குரல் எழுப்பிய சான்ருேர். மருங்கூர்ப் பட்டினச் சிறப்பும் (258), வாணன் சிறுகுடி வளமும் (340), பசும்பூண் வழுதி மருங்கையும் (358), அருமன் பேரிசைச் சிறுகுடியும் (367) இந்நூற் செய்யுட்களுள் இவரால் சிறப்பித்துக் கூறப் பெறுகின்றன. இவர் வரலாறு விரிவானது. இவர் புலமையோ அளவிட்டுக் கூறமுடியாத அளவினது. . கப்பாலத்தனர் 240 அத்தனர் இவர் பெயர். ஐதே கம்ம இவ்வுலகு படைத்தோனே எனப் பாலின எடுத்துக் கூறிய சிறப்பால் 'நப்பால் என்று சிறப்பிக்கப் பெற்றனர். இப் பாலைத் திணைச் செய்யுள் ஏக்கப் பெருமூச்சின் எழிற் சித்திரமாகும். கம்பி குட்டுவர் 233,945 'குட்டுவர் என்னும் சேரவரசர் பரம்பரையைச் சார்ந்தவர். இவர் நம்பி என்னும் சிறப்புப் பெயரினர். குறுந்தொகையுள் 109, 243 ஆம் செய்யுட்களையும் பாடியவர். கைகடந்த் காம நோயின, நோயும் கைம்மிகப் ப்ெரிதே; மெய்யும் தீயுமிழ் தெறலின் வெய்தாகின்றே (236) எனவும், வாழ்தல் மற்று. 'எவனே? தேய்கமா தெளிவே! எனவும், உருக்கமாக மனவேத்னை களைக் காட்டும் சொற்றிறன் அமைந்தவர் இவர். நற்றிணை 145 ஆம் செய்யுளையும் செய்தவர். - கல்லூர்ச் சிறுமேதாவியார் 282 நன்பலூர்ச் சிறு மேதாவியர் எனவும் வழங்குபவர் ஒருவர் காணப்படுவர். இவர் நல்லூரினர் என்பதல்ை இவ்வாறு குறிக்கப் பெற்றனராகலாம். 'அகில் சுடு கானவன் உவல்சுடு கம்ழ்புகை ஆடு மழை கங்குலின் மறைக்கும் நாடு' எனக் குறிஞ்சி வளம் பாடியவர் இவர். ജലേു 29 மிளைகிழான் நல்வேட்டனர் எனவும் கூறுவர். அவர் பாடிய தாக வருவன் 210,349 ஆம் செய்யுட்கள். வேளாண் குடியினர். இது-22-குறிஞ்சித் திணைச் செய்யுள் இரவுக்குறி மறுத்து வரைவு வேட்டலாக அமைந்தது. ந.-28 ...Y *५

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/445&oldid=774674" இலிருந்து மீள்விக்கப்பட்டது