பக்கம்:நற்றிணை-2.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 நற்றிணை தெளிவுரை நிகண்டன் கலக்கோட்டுத் தண்டர்ை 382 இவர் பெயர் நிகண்டன் என்பது. இது ஒருவகைத் துறவு நெறி எனவும் கருதுவர். கலைக்கோட்டுத் தண்டினராகத் தோன்றியமையின் இப் பெயர் பெற்றவர் ஆகலாம். ஆருயிர் அழிவதாயினும் பழியுண்டாதலின் காமநோயை மறைத்தல் வேண்டும் என்று பெண்கள் கருதும் மனப்பாங்கை இச் செய்யுளிற் காணலாம். நொச்சி நியமங்கிழார் 208, 209 நொச்சி வேலி சூழ்ந்த நியம்ம் என்னும் ஊரைச் சார்ந்த வேளாண் குடியினர் என்பர். நியமம் நெகமம் என்னும் இந்நாளைய ஊர் எனவும் கொள்வர். பூக்கோள் காஞ்சியாக அமைந்த இவரது புறச் செய்யுள் (293) மிகச்சிறந்த பொருட் செறிவு உடையதாகும். நொச்சித் திணை என்பது புறத்துறை களுள் ஒன்று. அதனை முறைமை தவருமல் போற்றி வாழ்ந்த மற்மாண்பினர் இவர் எனக் கொள்வதும் இவர் பெயருக்குப் பொருத்தமாகலாம். காமநோயின் தன்மையை, படுங்கால் பையுள் தீரும்; படாஅது தளிருங்காலை யாயின், என் உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே என்று இவர் உருக்கமாக எடுத்துக் கூறியுள்ளனர் (209). பரணர் : 醬 247, 260, 265, 270, 280, 300, 310, 350, 356 - இவர் கபிலரோடு ஒருங்கு சேர்த்து உரைக்கப்படும் சிறப்பினர். வரலாற்றுச் செய்திகளைத் தம் செய்யுட்களில் அமைக்கும் வரலாற்று மனத்தினர். கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பதிற்றுப்பத்துள் (ஐந்தாம் பத்து) பாடிப் பெரும் பரிசில் பெற்றவர். கொல்லித் தெய்வம் காக்கும் குடவரை பற்றியும் (201), புலிகொன்ற யானையின் செங் கோட்டைக் கழுவுவதற்கு மழை பெய்த சிறப்பையும் (247), தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன் மலிபுனல் வாயில் மிDலி காக்கும் பாரம் பற்றியும் (265), இருப்பை நகரம் பற்றியும் (266), மாரி வண் மகிழ் ஓரி கொல்லி பற்றியும் (265), வேந்தர் ஒட்டிய ஏந்துவேல் நன்னன் பற்றியும் (270), தொன்றுமுதிர் வேளிர் குன்றுார் பற்றியும் (280), தழும்பன் ஊனுர் பற்றியும் (300), தேர்வண் விராஅன் இருப்பை பற்றியும் (350), இவர் செய்யுட்கள் நமக்குக் கூறுகின்றன. இவற்றுடன் மக்களின் மனப்போக்குகளையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/446&oldid=774676" இலிருந்து மீள்விக்கப்பட்டது