பக்கம்:நற்றிணை-2.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 நற்றிணை தெளிவுரை மதுரைக் கொல்லன் வெண்ணுகளுர் 285 வெண்ணுகன் என்னும் பெயரோடு கொற்ருெழில் செய்து வந்தவர் இவர். இர்வின் வருதல் அன்றியும்...அயலோர் அம்பலின் அகலான், பகலின் வரூஉம்' என்று கூறி, வரைந்து வராத தலைவனை நகையாடி, வரைந்துவரத் தோழி கூறுவது சிறந்த பேச்சு மரபாகும். மதுரைச் சுள்ளம் போதனுர் 215 பூதனர் என்பதே போதனர் என மருவிற்று என்பர். இது நெய்தல் திணைச் செய்யுள். இச் செய்யுளின் அமைப்பு இவர் இரவிலே கடல்மேற் சென்று வேட்டையாடும் மரபினை நன்கு தெரிந்தவரர்கக் காட்டுமாதலின், இவரைக் கடற்கரையூரவர், மதுரையில் வந்து தங்கியவர் எனலாம். இது நெய்தல் திணைச் செய்யுள். மீன் நெய்யிட்டுப் பரதவர் விளக்கு எரித்த வழக்கத்தை இச் செய்யுளால் அறியலாம். வேட்டையிலே உறுதியோடு முயன்று வெற்றியோடு-வெற்றி கண்டபின்னரே -கரைக்கு மீள்வர் பரதவர் என்பதும் காணலாம். - மதுரைப் பள்ளி மருதங்கிழார் மகளுர் சொகுத்தளுர் 352 சொகுத்தனர் இவர் பெயர்: மதுரையிலிருந்தவர்; மருதங் ழார் என்பாரின் மகனர். இச்செய்யுள் பாலைத் திணைச் செய்யுள் ஆகும். பாலைப் பகுதியின் வெம்மையை மிகவும் விளக்கமாகக் காட்டுவது இச் செய்யுள். முதுநரியின் நீர் வேட்கையும், அது பேய்த்தேரைக் கண்டு மய்ங்கித் திரிந்து, பதுக்கை நீழலான ஒதுக்கிடமும் பெருமல் வாடுவதும் பாலையை நன்கு உணர்த்துவன. அங்கே, தன் உள்ளத்தே மனைவியின் உருவைத் தோன்றக் காண்பவன் எப்படி வந்தாளோ? என்று கவலைப்படுவதாக அமைந்துள்ளது சிறந்த இலக்கிய நயம் ஆகும். மதுரைப் பாலாசிரியன் சேந்தன் கொற்றஞர் 322 சேந்தனரின் மகனரான இவர் கொற்றனர் என்னும் இயற் பெயரினர். ஆசிரியூத் தொழிலில் ஒரு பகுப்பிலே பணியாற்றி யவர். மேனி மாற்றங்களை அன்னை கண்டு, வெறியாடலுக்கு ஏற்பாடு செய்வதுபற்றிக் கூறும் செவ்வி மிகவும் செறிவு உடையதாகும். வேலன் இன்னியம் கறங்கப் பாடிப் பன்மலர் சிதறிப் பரவுறும் பலிக்கு இந்நோய் தணிவதாயின், இதனின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/452&oldid=774690" இலிருந்து மீள்விக்கப்பட்டது