பக்கம்:நற்றிணை-2.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடிய சான்ருேர்கள் 449 | கொடியது பிறிது ஒன்று இல்லை என்று கொதிக்கின்ற பெண்மையைக் காட்டுகின்ருர் இவர். - - மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனர் 317 இவர் நாகன் என்பார் மகளுர்; வேட்டனர் என்னும் பெயரினர். 'பூவண்ட நாகன் என்பது, பூவினை நாடித் திரியும் வண்டினைப்போல இன்றமிழ்ச்சுவை நாடிப் பலர்பாலும் சென்று பெற்றுக் களித்த தமிழன்பினர் என்றும் உணர்த்தும். இது குறிஞ்சித் திணைச் செய்யுள். பெண்கள் கூடிச்சென்று குவளை மலர்களைக் கொய்து வருவதுபற்றிய செய்தியை இதற்ை காணலாம். மதுரைப் பெருமருதனுர் 241 பெருமருதனர் என்னும் பெயர் இவர் வையைத் துறைகளுள் ஒன்ருன பெருமருதந்துறைப் பகுதியினர் என்ப தல்ை உண்டாகியிருக்கலாம். .திருமருது முன்துறை என்ருற் ப்ோல நீர்த்துறைகள், துறைக்கு நிழ்ல் செய்யும் மரங்களை யொட்டிப் பெயர் பெறுவது பண்டைக்கும் இன்றைக்கும் வழக்காகும். அரசடித்துறை, ஆலடித்துறை என்ருற்போல ஆற்றுத் துறைப் பெயர்கள் தென்னட்டில் வழங்கும். இது பாலைத் திணைச் செய்யுள். நில்லாப் பொருட் பிணி என்று பொருளார்வத்தை விளக்கியவர் இவர். உவமை நயம் நிரம்பிய செய்யுள் இது. மதுரைப் பெருமருதன் இளநாகனர் 251 இவர் பெருமருதனரின் மகளுர்; இளநாகனர் என்னும் பெயரினர். செறிப்பு அறிவுறுத்தி வரைவு கடாதலாக வரும் இச் செய்யுள் சிறந்த செவ்வி நிரம்பியதாகும். 'தினையே! தோடிடங் கோடாய் நீடினை விளைமோ!' என்று வேண்டுவது அரிய கற்பனை ஓவியம் எனலாம். - மதுரை பேராலவாயர் 361 பேராலவாயர் எனவும் இவர் பெயர் விளங்கும். இவர் பாடின் செய்யுட்களாகத் தொகை நூற்களுள் காணப் பெறுவன ஆறு செய்யுட்கள் ஆகும். பூதப் பாண்டியன் தேவி தீப்பாய்ந்த காலத்திலே இவர் பாடியுள்ள புறப்பாடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/453&oldid=774692" இலிருந்து மீள்விக்கப்பட்டது