பக்கம்:நற்றிணை-2.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடிய சான்ருேர்கன் 451 வரலாறே சிலம்புக்கு அடிப்படை (216) என்பாரும் உளர். 'முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி ஏமுற விளங்கிய சுடர்' எனக் கதிரோனைக் காட்டுவர் (283); வண்டென மொழிப, மகன் என்னரே என்று பரத்தனை தலைவனைப் பழித்துக் காட்டுவர். (290) இழையணி மகளிரின் விழைதக, நீடு சுரி இணர சுடர்வீக் கொன்றை, விழைதகப் பூக்கும் - 302 என்பர்; மீன்குடை நாற்றம் செல்லாது துய்த்தலை மந்தி தும்மும் - 326 என்று குரங்குகளின் இயல்பை எடுத்துக் காட்டுவர்; தலைமகன் தலைமகளைப் பிரிந்து பாசறையிலிருந்து வருந்துவதாக இவர் ஒவியப்படுத்துவர் 341; நீ விளையாடுக சிறிதே; யானே மழகளிறு உரிஞ்சிய பராரை வேங்கை இரும் புறம் பொருந்தி, அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென்; நூமர்வரின் மறைகுவன்' என்று காதலிக்குக் கூறும் காதலனின் செவ்வி போற்றிற் குரியது - 362, இவ்வாறெல்லாம் நமக்குப் பழந்தமிழ் மக்கள் வாழ்வின் நயத்தைக் காட்டும் சிறந்த சான்ருேர் இவர். . மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரஞர் 289 மேவார் ஆரரண் கடந்த மாரி வண் மகிழ்த் திதலை எஃகின் சேந்தன்' என்பான் அழிசி என்பானின் மகன்; ஆர்க்காட்டு ஊரினர். இவர் மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் என்பாரின் மகனரான குமரனர் என்பவர். காதலர் நிலம் புடைபெயர்வ தாயினும், கூறிய சொல் புடை பெயர்தலோ இலரே என்று அந்நாளைய இளைஞரின் சால்பை எடுத்துக் காட்டுகின்ருர் இவர். இரவெல்லாம் காமநோய் மூண்டு வருத்துவதற்கு, இடையர் இரவுக் குளிருக்காக நெருப்பிட்டு வைத்துள்ள பெரு மரத்தின் வேர் இரவு முழுவதும் கனன்று கொண்டிருக்கும் நிலையை நயமாக உவமித்தவர் இவர். மள்ளனர் 204 இவர் போர் மறவர் என்று கூறலாம். குறுந்தொகையில் 72 ஆம் செய்யுளையும் செய்தவர். இவர் பெயர் அம்மள்ளனர் எனவும் காணப்படும். கொடிச்சி செல்புறம் நோக்கி விடுத்த நெஞ்சம் விடல் ஒல்லாதே’ என்று ஒரு காதலின் காதற்பாங்கை எடுத்துக் கூறும் சிறப்பினர். மாருேக்கத்து நப்பசலையார் 304 மாருேக்கம் என்பது கொற்கைப் பகுதி சார்ந்த நாட்டின் பழம் பெயர் என்பர். ஒக்கம் உயர்ச்சி; பெரிதும் உயர்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/455&oldid=774696" இலிருந்து மீள்விக்கப்பட்டது