பக்கம்:நற்றிணை-2.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடப்பெற்ற தலைவர்கள் ( எண்-செய்யுள் எண் அஞ்சி (கெடுமான்) 381 தகடூரிலிருந்து அரசியற்றிய மழவர் குடியினருள் மாவீரனகத் திகழ்ந்தவன் இவன். ஒளவ்ையார்பால் பேரன்பும் பெரு மதிப்பும் பெருநட்பும் கொண்டு வாழ்ந்தவன். அதியமான் நெடுமான் அஞ்சி என்றும் இவன் பெய்ர் வழங்கும். மாவீர கைவும் தமிழ்ப் பெருவள்ளல்களுள் ஒருவனுகவும் திகழ்ந்த இவனைச் சேர்மான் பெருஞ்சேரல் இரும்பொறை முடிவில் போரிட்டு அழித்தான். தகடூர் யாத்திரை அப்போர் நிகழ்ச்சி குறித்த செய்யுட்கள் கொண்டது என்பர். இவனைப் பற்றிய செய்திகளை புறநானூற்றுச் செய்யுட்களில் விளக்கமாகக் காணலாம். ஒளவ்ையார், இச்செய்யுளில், ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்கத் தேர் வீசும் இவனுடைய தேர் வழங்கும்.வள்ளன்மையை எடுத்துக் காட்டுவர். அண்டிரன் 237 இவன் ஆய் அண்டிரன் எனப் போற்றப் பெறுபவன்: பொதியில் மலைப்பகுதியிலிருந்து அரசாண்டவன்; இவனிருந்த ஊர் இந்நாளினும் ஆய்க்குடி என வழங்கும். இவனைப் பாடிப் போற்றியவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆவர். "மோசி பாடிய ஆயும் என்று பிற சான்ருேர் கூறுவர். நாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வற்கு அளித்துப் புகழ் கொண்ட வள்ளல் இவன். இவனுடைய பல்வேறு சிறப்புக் களையும் புறப்பாடல்களுட் காணலாம். இரவலர் வருஉம் அளவை, அண்டிரன் புரவுஎதிர்ந்து தொகுத்த யானை போல, உலகம் உவப்ப, ஒது அரும் வேறுபல் உருவின், ஏர் தரும் மழையே என, இவ்னது யானைக் கொடையை இச் செய்யுளில் காரிக் கண்ணனர் வியந்து போற்றுவர். அருமன் 367 - 's இவன் சிறுகுடி என்னும் இடத்திலிருந்த ஓர் குறுநிலத் தலைவன். கள்ளிற் கேளிர் ஆத்திரை, உள்ளூர்ப் பாளை தந்த ந.-29 - ५ -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/461&oldid=774712" இலிருந்து மீள்விக்கப்பட்டது