பக்கம்:நற்றிணை-2.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f பாடப்பெற்ற தலைவர்கள் 489 குட்டுவன் 395 இவன் குட்ட நாட்டு அரச மரபைச் சேர்ந்த சேரர் குடியினன். இவனது குடவரையை நற். 150ல் முடத்திரு. மாறன் பாடுவர். இவனது அகப்பாவைச் செம்பியன் (பாண்டியன்) அழித்த செய்தியை நற்.14-ல் மாமூலனர். குறிப்பிடுவர். அம்முவனர் கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் குட்டுவன், வேந்தடு முயக்கத்து முரசு அதிர்ந்தன்ன என்று இச் செய்யுளில் இவனுடைய போர் மற த் ைத வியந்து பாராட்டுவர். கொல்லிப் பாவை 201 சேரர்களின் காவல் தெய்வமாகக் கொல்லிமலையிலே அமைந்த தெய்வப் பாவை இது. அண்டினுேரைத் தன்பால் ஈர்த்துக் கொன்றழிக்கும் சக்திபெற்றதும், கவர்ச்சி மிக்கதும் என்று கூறப்படும். இவ்வாறு கொல்லும் பாவையாதலின், கொல்லிப் பாவை என்று பெயர் பெற்று, பின் அதுவே அம்மலைக்கும் பெயராயிற்று எனலாம். கொல்லிப்பாவையின் சிறப்பினை இச்செய்யுளில் பரணர் விளக்கிக் கூறுகின்ருர். "காற்று மோதி இடித்தாலும், மிகுதியான மழை பெய்தாலும் இடிகள் உருமித் தாக்கிலுைம், வேறு பலவான இயற்கை உற்பாதங்கள் தோன்றிலுைம், நில நடுக்கமே ஏற்பட்டாலும், கண்டாரைக் கவரும் தன் உருவப் பேரழகினின்றும் அழியா திருக்கும் நிலைத்த தன்மைகொண்டது கொல்லிப் பாவை' என்று இச் செய்யுள் போற்றுகின்றது. பூதம் புணர்த்த புதிதியல் பாவை' என்பது நற்றிணை 192. - , செழியன் 298, 340, 387 பாண்டியருள் ஒருவன். 'நல் தார்ப் பொற்றேர்ச் செழியன் கூடல்' என 298 ஆம் செய்யுளில், விற்றுாற்று வண்ணக்கண் தத்தருைம், கல்லா யானைக் கடுந்தேர்ச் செழியன் (340) என .நக்கீரரும், செருவிறந்து ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த, வேல்கெழு தானைச் செழியன் (387) எனப் பொதும்பில் கிழார் மகளுரும் இந்நூற் செய்யுட்களுள் கூறுவதல்ை, இவனைத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்றே கருதலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/463&oldid=774716" இலிருந்து மீள்விக்கப்பட்டது