பக்கம்:நற்றிணை-2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நறறனை தெளிவுரை குருகார் கழனியின் இதணத்து ஆங்கண் ஏதி லாளன் கவலை கவற்ற ஒருமுலையறுத்த திருமா வுண்ணிக் கேட்டோர் அனையர் ஆயினும், 70 வேட்டோர் அல்லது பிறர்இன் ஞரே! தெளிவுரை: ஊடலுணர்த்திக் கூடுகின்ற கலவியோடே பொருந்தியவராக, என்பால் எய்திலராயினும், காண்டற்கு இனியராகிய தலைவரைக் கண்டு இன்புறுவதற்கான எல்லை யிலேனும் வாழ்ந்திருத்தலும் அந்த அளவிலே எனக்கு இனி தாவதாகும். கண்ணில் விழுதலான வொரு சிறுதுகளையும் கையானது அப்பொழுதுதானே சென்று விலக்குமாறு போல, நம்மிடத்தே பொருந்தியுள்ள அவரது பிரிவாலுண் டாகிய இக் காமநோயினை வந்து விலக்காராயினும், அவரில் லாத ஊரிலே யானிருப்பது என்பது மேலும் துன்பந் தருவ தாகும் அல்லவோ! எரிபோலும் பூக்களைக் கொண்ட வேங்கை மரத்திடத்தே உறைவோளுகிய கடவுள் காத் தலைச் செய்கின்ற, குருகுகள் ஆரவாரிக்கின்ற வயலின் கண்ணே இருந்த கட்டுப்பரணுகிய அவ்விடத்திலே, அயலா ளுகிய ஒருவன் உண்டாக்கிய கவலையானது உள்ளத்தை விருத்துதலினலே, தன் ஒரு முலையையே அறுத்துக் கொண்ட வளான திருமாவுண்ணியின் கதையினைக் கேட்டோரும், அத் தன்மையராகவே நம்மைக் கைவிட்டனராயினும், நம்மால் விரும்பப்பட்டோராகிய அவரையன்றிப், பிறர் யாவராயினும் நமக்கு இன்னதாரே யாவர்! சொற்பொருள் : துணி - புலவியாகிய துன்பம். துன்னல் . வந்து சேர்தல். காணுநர் - காண்டற்கு இனியராய தலைவர். காண்புழி - காணற்கு ஏற்கும் ஓர் இடத்து. விழுமம் - துயரம். எரி - நெருப்பு. வேங்கைக் கடவுள் - வேங்கை விடத்தே உறையும் கடவுள்; வேங்கை மலரும் காலமே திருமண நிகழ்வை அறிவிக்குங் காலம் எனக் கொள்வது பண்டைய மரபு; அது காலை அதன்கண் தெய்வம் உறைவ தாகக் கருதி அதனைப் பூசிப்பதும் வழக்கம்; இதுபற்றியே தன் உறவுக்கு அத் தெய்வத்தைச் சான்ருக்கிய திருமா அண்ணி, பின்னர்க் காதலற்ை கைவிடப்பெற்ற போதிலே சான்ருேர் பால் வழக்குரைத்த காலத்து, அத் தெய்வம் சான்று கூருதிருக்கத் தன் ஒரு முலையை அறுத்தெறிந்து நம் கற்பை நிலநாட்டியபோது, நெய்வமும் தோன்றிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/50&oldid=774738" இலிருந்து மீள்விக்கப்பட்டது