பக்கம்:நற்றிணை-2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றினை தெளிவுரை - 49 நீங்காத காமநோயானது வருத்துதலாலே வருந்தியிருக்கும் யானும், பருத்த அடியினையுடைய பனைமரத்தின் மடலிலே. இருந்தபடி தன் துணையை விளித்துக் கூவும் அன்றிற் பறவையினது குரலையும் இன்னும் தனிமையளாக இருந்த :படியே கேட்டிருப்பேனே? எவ்வண்ணம் ஆற்றி இருப்பேன் என்பதாம். சொற்பொருள் : ஞாயிறு ஞான்று-ஞாயிறு சாய்ந்து. எல்லி.இரவுப் பொழுது. புலம்படைந்தது-பொலிவிழந்து விட்டது. வயின்தொறும்-இடந்தோறும். சேவல் என்றது ஆந்தைச் சேவலை. விளிக்கும்-கூவி அழைக்கும். மாயாக் காதல்-குன்ருத காதல். அதர்ப்பட-நெறிப்பட. பாறியபட்டுப்போன். பாருசினை-இலைகள் உதிர்ந்துபோன கிளை. குராஅல்-கபில நிறம். கூகை-பேராந்தை. ஆன-அமையாத, நீங்காத, அன்றில்-அன்றிற் பறவை. விளக்கம் : ஞாயிறு சாய்ந்து கதிர் மழுங்கிற்ைபோல யானும் ஒளியிழந்தேன்; எல்லியிற் பூவீழ் கொடியிற் புலம் படைந்தாற் போன்று யானும் புலம்படைந்தேன் என் கின்ருள். கூடியிருந்த காலத்து, இனிதாயிருந்த மாலையும் இரவுப்பொழுதும் இதுகாலை மகிழ்வூட்டவில்லை என்பாள் இவ்வாறு கூறுகின்ருள். "ஆந்தைச் சேவல் இரைதேடப் போன தன் துணையை விரும்பிக் கூப்பிடும்’ என்ருள், அத்தகைய அன்புதானும் தலைவனிடம் இலையாயிற்றென்று வருந்துகின்ருள். அதுவும் இன்புற்றிருத்தலையே நினையும் பொழுதில், அவன்தான் பிரிந்து உறைகின்ருனே எனவும் நோகின்றனள். "மாயாக் காதலொடு அதற்படத் தெளிந்தோர் இன்று அக் காதலையும் மறந்தனர் போலும் என்கின்ருள். பகற் போது பிறவாற்ருன்ஒருவாறு தேறியிருக்கின்றமனம்,இரவுப் போதில், அவனே நினைவாக நின்று வருந்தித் துயிலையும் கெடுத்து நோயும் செய்யும் என்பாள், கூகையும் இராஅ இசைக்கும்’ என்கின்ருள். இனியும் தான் உயிரோடு ஆற்றி யிருத்தல் தானும் இயலாது என்பாள் அன்றிற் குரலைத் தமியேன் கேட்குவென் கொல்லோ?’ எனச் சொல்லி வேதனையுறுகின்ருள். இதல்ை அவள் கொண்ட துயரத்தின் மிகுதியும் புலப்படும். - மாலைப் பொழுதானது காமநோயினை முற்படவிட்டு வருதலால், அது வருவதற்கு ஏதுவாய் அமைந்த ஞாயிறு படுந் தன்மையைக் கூறினுள்; தனித்து உறையும் வாழ்விலே'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/53&oldid=774741" இலிருந்து மீள்விக்கப்பட்டது