பக்கம்:நற்றிணை-2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

့) k 50 ਮੀ 2XS நற்றியே தெளிவுரை இரவுப்போது இன்பந் தராமையின் எல்லியும் புலம்பு அடைந்தது என்ருள். ஏனைப் புள்ளினந்தானும் புணர்ச்சி கருதித் தத்தம் துணையை விளிக்கும் குரலைக் கேட்பதனலே, தன் துயரம் மிகுவதனையும் சூறிப் புலம்புகின்ருள். 219. என்னது உம் புல்வேன்! பாடியவர்: தாயங்கண்ணனர். திணை : நெய்தல். துறை : வரைவிடை வைத்துப் பிரிய ஆற்ருளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. ((து. வி.) பொருளிட்டி வந்து நின்னை மணப்பேன் என்று உறுதி கூறிப் பிரிந்தானகிய காதலன், தான் குறித்த பருவத்தில் வராது போயின.தல்ை, அதுவரை ஆற்றியிருந்த தலைவியின் ஆற்ருமை மிகுதியாகின்றது. அதுகாலை, அவள் துயர்கண்டு பொருதாளான தோழியானவள் தலைவனின் பாற் குறையாகச் சில கூற, அது கேட்டுத் தலைவி தன் காதலுறுதி புலப்படக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) கண்ணும் தோளும் தண்ாறும் கதுப்பும் பழநலம் இழந்து பசலே பாய, - இன்னுயிர் பெரும்பிறி தாயினும், என்னது உம் புலவேன் வாழி-தோழி!-சிறுகால் அலவைெடு பெயரும் புலவுத்திரை களிகடல் 5 பெருமீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர் கங்குல் மாட்டிய கனகதிர் ஒண்சுடர் முதிரா ஞாயிற்று எதிரொளி கடுக்கும் கானலம் பெருந்துறைச் சேர்ப்பன் தானே யானே புணர்ந்த மாறே1. 10 தெளிவுரை: தோழி! நீயும் நெடிது வாழ்வாயாக! கண்களும் தோள்களும் தண்ணிய நறியகூந்தலும் தத்தம் உடைய பழைய அழகினை இழந்தன. என் மேனியிலும் பசலை பாய்ந்தது. இனிதான உயிரும் இறந்துபடுவதான எல்லைக்கண்ணே உள்ளது. ஆயினும், நம் சேர்ப்பனேடு யான் சிறிதேனும் புலத்தலைச்செய்யேன் என்று அறிவாய்ாக. சின்னஞ்சிறு கால்களை உடையவான ஞெண்டுகளோட பெயர்ந்து செல்லும் புலவு நாற்றத்தைக் கொண்ட அலைகளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/56&oldid=774744" இலிருந்து மீள்விக்கப்பட்டது