பக்கம்:நற்றிணை-2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

שר .* நற்றின தெளிவுரை 53 தெளிவுரை : உணவு உண்ணுததாகிய நல்லதொரு குதிரையைப் பனைமடலாலே பண்ணிக் கொண்டோம். அதற்குச் சிறிய மணிகளையும் தொடராகக் கோத்தேம். பெரிய கச்சையையும் பூட்டி நிறுத்தினேம். குறியதாக முகிழ்த்துள்ள எருக்கின் பூவாலாகிய கண்ணியையும் சூட்டி னேம். அதிலே ஏறினேமாய் அதனை ஈர்த்துக் கொண்டே மாய்த் தலைவியின் ஊரிலுள்ள தெருவிடத்தேயும் எம் குறையைக் கூறியபடி வந்தேம். அதுகாலை அத் தெருவின் கண்ணே எம்மைப் பின்தொடர்ந்து திரிகின்றவராகச் சிறிய குறிய பிள்ளைகளும் பலர் சூழ்ந்தனர். அவர்கள்தாம் பெரிதும் சான் ருேர் ஆவர் காண்! நன்முக இறுகக்கட்டிய குடமுழாவின்கண் ஒயாது அடித்தலாலே எழுகின்ற முழக் கத்தோடுங் கூடிய திருவிழாவையுடைய அவ்வூரினிடத்தே, ‘யாமும் இவ்வூரினேம்’ எனச் சொல்லியபடி, எம்மோடும் உரையாடியவர்தாம், பெரிதான மயக்கத்தை உடைய வர்கள் ஆவர். தாந்தாம் உலக நடையினை அறிந்திருப்பா ராயின், தேன்போலே இனிக்கின்ற பேச்சினையும் கெண்டை மீனைப்போல விளங்கும் மையுண்ட கண்களையும் உடைய வளான நம் இளமடந்தைக்கு இத் தோழியர்தாம் அயலாம் தன்மை உடையராவர் என்று சொல்லுகின்றனரே! அவர் தாம் எத்துணை மயக்கம் கொண்டவர்! சொற்பொருள் தொடர்தல்-தொடர்ந்து கோத்துக் கட்டுதல்; தொங்கலாகக் கட்டுதலும் ஆம். கச்சு-பனை மடலின் கறுக்கால் புண்ணுகாமைப் பொருட்டு மேலாக இடப்படும், பெரிய துணியாலாகிய கச்சு. குறுமுகிழ். எருக்கு-குறிதாக முகிழ்த்த எருக்கு, நன்கு இதழ் விரியாத பூ என்றபடி, குவிமுகிழ் எனவும் பாடம். 'நன்மா’ என்றது, அதுதான் தனக்குத் தலைவியை இசைவித்தலாகிய நன்மையைச் செய்தலினல். முழவு-குடமுழவு என்னும் தோல் கருவி. ஏமுறல்.ழயங்குதல். ஒப்புரவு-ஒத்தது அறிந்து அதற்கேற்ப நடக்கின்ற ஒழுகலாறு. மனத்திற் பட்டதைப் பட்டபடியே ஒளியாது உரைத்தல் சிறு பிள்ளைகளின் இயல்பாதலின் சான்ருேர்’ என்றனர். விளக்கம் தலைவி இசையாதபோது, அச் சிறுவர்தாம் உண்மையே உரைத்தனர்; யாம் நினக்கு அயலோர் ஆகலே உண்மையாயிற்று எனத் தோழி வருந்துவதாகவும், அதனல் தலைவி தெளிவடைந்து இசைவு கூறுவதாகவும் கொள்க. அயலோர் ஆகலே உண்மை’ என அவர் கூறியது சான்ருண் மையான பேச்சுப் போலும்' எனத் தலைவன் கூறியதைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/57&oldid=774745" இலிருந்து மீள்விக்கப்பட்டது