பக்கம்:நற்றிணை-2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றினை தெளிவுரை - , . . " & முருகவேளைப் போன்ற வலிமையோடு, கடுமையான சினத்தை மிகுத்துக் கொண்டு போரிட்ட யானையினது குருதிக் கறைபடிந்த வெண்மையான கொம்புகளைப்போல, வாழையினது அப்பொழுதுதானே ஈன்ற கூர்மை பொருந்திய கொழுத்த முகையானது, வெவ்விய சாயலை யுடைய மகளிரது கூந்தலை முடியிட்டுக் கொண்டையாகப் போட்டாற்போல, அதன் பூவோடும் கூடியதாக அசைந்து கொண்டிருக்கும், பெரிய மலைகளுக்குரிய நாடளுகிய அவனை, அதுகுறித்து இரந்து வேண்டினரும் உளரோ, காண்! சொற்பொருள் : முருகு - முருகப்பெருமான். முன்புவலிமை. சினம் செருக்கல்-சினத்தை மிகுத்துக்கொள்ளல்; சினத்தால் செருக்குறுதல். பொருத யானை வெண்கோடு' எனவே, அதன்மேல் படிந்துள்ள குரு தி க் க ைற யு ம் பெற்றனம். வை-கூர்மை. முகை-மொட்டு. வெண்கோடு தாறுவிடுதலுக்கும், ஒதி பூவுக்கும் உவமை. துயல்வரல்அசைதல். வரி - இரேகைகள். பருவரல் - பிரிவுத்துயரம். நார்-அன்பு. - விளக்கம் : "தானே வந்து தலையளி செய்தவன், இன்று நாம் இவ்வாறு நலனழிந்து வாடியிருக்கும்போது, அருளற்ற வய்ை நம்மை மறந்தானே? என்பவள், இரந்தோர் உளர் கொல்?’ என்கின்ருள். உதவாத தன்மையை நினைவாள் 'நாரில் மார்பு என்கின்றன்ஸ். நார்-அன்பு. "விரும்பினர்க்கு உதவாத அன்பற்ற அவன் மார்பினை இங்கு விரும்பினரும் எவரேனும் உளரோ? அவன் பலர் மாட்டும் துய்க்கச் செல்லும் தன் பரத்தைமை இயல்பினலே தூண்டப் பெற்று என்னிடத்தும் வந்தனன். இதுகொண்டு தலைவியும் என்னை நோவது எதன்பொருட்ட்ோ?" எனப் பரத்தை கூறியதாக, இரண்டாவது துறைக்குப் பொருத்திப் பொருள் கொள்ளுக. 'வாழை ஈன்ற கொழுமுகையானது, பகையைக் கொன்று குருதிக்கறை படிந்து விளங்கும் யானைத் தந்தம் போல விளங்கும் மலைநாடன்' என்றனள். இதுதான், அவன் அன்புடையான் போலவே தோன்றிலுைம், உள்ளத்தே பெரிதும் கொடுமை செய்யும் இயல்பினைக் கொண்ட வணகவும் இருக்கின்ருன் எனக் குறிப்பால் கூறியதும் ஆகலாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/67&oldid=774756" இலிருந்து மீள்விக்கப்பட்டது