பக்கம்:நற்றிணை-2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றினே தெளிவுரை 67 தெளிவுரை : ஐயனே! புன்னை மரங்கள் செறிந்துள்ள அழகிய கானற் சோலையிடத்தே, நீ குறித்தபடியே - பல காலத்தும் வந்து, நின்னையும் இன்புறுத்தியவள், பின்ன லிட்ட அழகிய கூந்தலையுடையாளர்ன் என் தோழி! அவளுக்கு, ஐயோ! ஒலிக்கின்ற மணியையுடைய யானையினை யும், பசும்பொன்னலாகிய பூண்களேயும் உடையவர் சோழர். அவருக்கு உரித்தானது, கொடிகள் அசைந் தாடியபடி விளங்கும் தெருக்களைக் கொண்டதான ஆர்க்காடு என்னும் பேரூர். அவ்வூரிடத்தே, கஇளையுடைய திான குடங்களிலே வண்டினம் மொய்த்து நீங்காதபடியே இருக்கும். இடையருது தேர்கள் செல்லுகின்ற அவ்வூர்த் தெருவின்கண் விளங்கும் பூசலைப்போல விளங்குகின்றது, நின் அருளாலே என் தோழிக்கு இவ்வூர்த் தெருவின்கண் எழுந்திருக்கும் அலர் உரைகளின் ஆரவாரம் ஆறிவு:ை யோர் என்பவர் எல்லாரும் அறநெறியிலே நிற்பார் அல்லர்' என்று பலரும் கூறுவர். அதுதான் நின்னதும் ஆயின், அவளது சிறந்ததான இனிய உயிர்தான் இறந்துபட்டதன் பின்னரும், இப் பழிச்சொற்கள் அவள் குடிக்கும் மிகவும் துன்பம் தருவதாகிய தன்மையது என்றேனும் அறிவாயாக. "அவள் இறந்து படாவாறும், அலர் நிற்குமாறும் விரைந்து வந்து வரைந்து மணந்து வாழ்விப்பாயாக! சொற்பொருள் : அறிந்தோர் - அறிதற்குரிய அறநெறி களின் கூறுபாடுகளை அறிந்தோரான் நம் காதலர். அற னிலர் - அறன் தழுவிய நெறியின் கண்ணே நிற்பாரல்லர்; களவின் கண் கூடிய தலைவியை முறைப்படி வரைந்து கொள் ளலே அறத்தொடு பட்டது; அதனை மறந்தமையின் அற னிலர் என்றனள் போலும். இன்னுயிர் கழியினும் இன் ளுதே' என்றது, அவள் பிறந்த குடியிடத்தே உள்ளார்க்கு நீங்காத பழியாகி வருத்தந் தருதலினல். புணர்குறி - சேர் தற்கு என்று குறித்த குறியிடம். படுமணி - ஒலிக்கும் மணி. தடவு-கள் சாடி; அல்லது கட்குடம். 'புள்' என்றது வண்டினை. விளக்கம் : ஆர்க்காட்டுத் தெருவிலே, கட்குடிப்பவர் எப்போதும் கூடியிருத்தலாலும், தேர்களின் செலவு மிகுந் திருத்தலாலும் உளதாகும் ஆரவாரத்தைப் போல, உங்கள் களவுறவைப் பற்றிய பழிச்சொற்களைப் பற்றிய பூசலும் நீங்காது மிகுவதாயிற்று என்பதாம். "ஆர்க்காடு சோழர் பேரூர்களுள் ஒன்று என்பது இதனுள் கூறப்படுகின்றது. தொண்டை நாட்டு ஆர்க்காட்டிலும், பாண்டி நாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/71&oldid=774761" இலிருந்து மீள்விக்கப்பட்டது