பக்கம்:நற்றிணை-2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை - 69 தெளிவுரை: தோழி! கானகத்தே வாழ்வோனை வேட்டு வனது முதுகைப் போலத் தோன்றும், பெரிதான துதிக் கையை உடையதான வேழமானது, வரிந்து கட்டுதலை. யுடைய வில்லிலிருந்து ஏவப்படும் அம்புக்கு அச்சங் கொண்டது. அதனலே, ஆழ்ந்துபட்டுள்ள மலைப்பிளவி னிடத்தே மறைவாகச் சென்று நின்றபடி பிளிரு நின்றது. அத் தன்மைத்தான, மேலெழுந்து வீழ்கின்ற அருவிகளை யுடைய மலைநாட்டிற்கு உரிமையுடை யோனைவன் நம் தலைவன். அவன், மின்னலிட்டதாய் இருளைப் பிளந்து கொண்டு மேகங்கள் முழக்கமிடுகின்றதும், தாம் சூலுற்று முதிர்ந்ததனலே அதனலுற்ற கடனைத் தீர்க்குமாறு கண் ணுெளி மறையுமளவு நாற்புறமும் பரந்து, மிக்க இருளினைச் செய்கின்றதுமாக விளங்கும், செறிந்த இருளையுடையதான நள்ளிரவுப் பொழுதிலே, நற்பண்பாடுகள் ஏதும் இல்லாத தான கடத்தற்கரிய வழியினைக் கடந்தேமாய், அவன் பொருட்டாக வருகின்ற நம்மாட்டு, அவன்தான் அருளினைச் செய்ய மாட்டானே? அவன் அவ்வாறு அருளாதிருத்தல் தான் எதேைல என்று சொல்லப்படுமோ? அதனை யானும் அறியேனே! - சொற்பொருள்: வசிபு-பிளந்து; இருளைப் பிளந்து எழுகின்ற மின்னலின் ஒளியாதலின் வசிபு என்றன்ர். அதிர் குரல்-அதிர்கின்ற குரல், இடி முழக்கம்; பிற உயிரினங் களை அதிரச்செய்கின்ற கடுங் குரலும் ஆம். முதிர் கடன். சூல் முதிர்ந்ததனலே உண்டாகிய கடமை; அது அதனைக் கழித்தல்; அதாவது, மழையாகப் பெய்தல். கண் தூர்பு. கண்ணுெளி மறையுமாறு. கனையிருள்-செறிந்த இருள். பண்பில் ஆரிடை-பண்பிலாத கடத்தற்கரிய காட்டுவழி; பண்பில்லாமை கரடு முரடு உள்ளமையும், கொடு விலங்குகள் உள்ளமையும், பசுமை கெட்டு பாலைபட்டமையும் ஆம். சிறுபுறம்-முதுகுப் புறம். வரிகொள்-வரித்தலைக் கொண்ட, வரித்தலாவது வரிந்து கட்டுதல், இதல்ை வில்லுக்கு வலிமை மிகுதிப்படும். அழுந்து-பள்ளம். விடரகம்-மலைப்பிளப்பிடம், விளக்கம்: வரும் வழியது ஏதங் கருதிக் கவலையுறுதல் இயல்பேயாகலின், இனி இவ்வாறு வருதலை மேற்கொள்ள, விடாது, விரைய வரைந்து கொள்ளுதலே செயற்கு உரியது. எனத் தலைமகன் கருதுவானவது இதன் பயனகும். கடன் தீர்த்தலாவது, தன் கடமையைச் செய்தல், மாரியும் தன் கடமையை மறவாதே தீர்த்தலைத் செய்தலை மேற்கொள்ளு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/73&oldid=774763" இலிருந்து மீள்விக்கப்பட்டது