பக்கம்:நற்றிணை-2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை - 75 தெளிவுரை: தோழி! முன்னேயும் மனைக்கண்ணேயுள்ள ஊர்க் குருவியினது முட்டையை உடைத்தாற்போலத் தோன்றும் பெரிதான அரும்புகள் இதழவிழ்ந்துள்ள, கருமை யான அடியையுடைய புன்னைமரங்களைக்கொண்ட கானற் சோலையிடத்தே, நம் தலைவன் நமக்குத் தந்த காதலானது, நம்-உள்ளத்தினின்றும் நீங்காதே யுள்ளதுகாண்! அதனலே, மாசற விளங்கிய நீலமணியின் நிறத்தையொத்த வானத்தினிடத்தே தோன்றி, உலகினரால் கைகூப்பித் தொழப்படுகின்ற மரபினையுடையது எழுமீன் மண்டிலம் என்னும் சப்தரிஷிகள் மண்டிலம். அஃதேபோலத் தோற்று மாறு சிறு வெண்காக்கைகள் பலவும் தத்தம் துணையோடும் கூடியவையாகப் பெரிய கடற்பரப்பின் கண்ணே தம் கரிய முதுகுப்புறம் தோயுமாறு நீரிற் குடைந்து ஆடியபடியேயிருக் கும். அதனைத் தமியேமாய் நோக்குங்கால், அது நமக்கும் துயர்தருவதாயுள்ளது! அங்ங்ணம் நாமும் களித்து மகிழ் வதற்கு நம் தலைவரும் நம் அருகே இலராயினரே! சொற்பொருள்: மை-குற்றம்; கருமையும் ஆம். அப் போது "மையற என்பதற்கு மேகங்களால் மறைக்கப்பட் டிராத நிர்மலமான என்று கொள்க, நட்சத்திரங்கள் தெளி வாகத் தோன்றுதலின். மணிநிற விசும்பு-நீலமணியின் நிறத் தைக் கொண்டதான விசும்பு. எழுமீன்-ஏழு நட்சத்திரக் கூட்டம் எனப்படும் சப்தரிஷி மண்டிலம்; இவர்கள்.தம் முடைய தவத்தாலும் ஒழுக்கத்தாலும் விண்மீன்களாகும் உயர்நிலை பெற்றவர்; இவர்களைத் தொழுவதேைல நன்மை யுண்டு என்பது பழந்தமிழரின் நம்பிக்கையாகும்; இதனை அடுத்திருப்பதும், இதனேடு இணைந்த சிறப்பினதுமான அருந் ததியைக் குறிப்பதாகக் கொள்க. இன்றுவரை மகளிர் தம் கற்புக்குச் சான்ருக அருந்ததியைக் காட்டித் தொழுதல் மரபு; இது மணச்சடங்குகளுள் ஒன்ருகவே அமைந்துள்ளது. இரும்புறம்-கரிய முதுகுப்புறம்,இதனைக் காக்கையின் முதுகுப் புறமாகக் க்ொள்வர்; அன்றிப் பெருங்கடல் பரப்பின் இரும் புறம்’ எனக் கடலோடு சேர்த்துக் கடலின் கருமையான மேற்புறம் எனலும் பொருந்தும். வானத்தே தோன்றும் எழுமீன்போல அவை அப்போது தோன்றும் என உவமை கொள்க. 'துறை புலம்பு உடைத்து' என்றது, அவைபோலத் தானும் நீர்விளையாட்டயர்தற்குக் காதலன் அருகே இன்மை யால், போதுவிரிந்த மலர்', அதன் அமைப்புக்கு உடைந்த குருவிமுட்டையின் வடிவம் உவமை கூறப்பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/77&oldid=774767" இலிருந்து மீள்விக்கப்பட்டது