பக்கம்:நற்றிணை-2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றினை தெளிவுரை - 79 கொண்டதும், மடப்பத்தை உடையதுமான பெரிய மந்தி யானது, வளர்ச்சி நிரம்பாத வலிய தன் குட்டியோடும், உச்சிகள் உயர்ந்த மலையடுக்கத்தே இயங்கும் மேகங்களுக்கு உள்ளாகச் சென்று ஒளித்துக் கொள்ளும். அத் தன்மை யுடைய பெரிய மலைநாட்டுத் தலைவனுக்கு நீயும் அருளிச் செய்தனை யாயின், இனியேனும் அத்தன்மைத்தான செயல் களை மேற்கொள்ளதே இருப்பர்யாக வெறிதே ஒன்று கூறுவேன்! அதனையும் கேட்பாயாக தலைமகன் நின்முன்னே வந்தடைந்தபோது, அன்பை உடையதான நின் நெஞ்சத் திலே மிக்கெழுகின்ற காதலை மறைத்துக் கொண்டனையாய், அவைேடு சொல்லாடி, அவன்தான், ஆன்ருேர் வகுத்துள்ள செவ்விய நெறியாகிய இல்லறம் மேற்கொண்டு ஒழுகுதலிற் பிழையாத சான்ருேன் ஆகுதலை நன்ருக அறிந்து கொண்டனையாகி, அதன் பின்பே அவனை ஏற்றுக்கொள் ளலையும் தெளிவாயாக! - சொற்பொருள் : கல்லாக் கடுவன் தன் தொழிலன்றிப் பிறவற்றைக் கற்றறியாத ஆண் குரங்கு; பிறவென்றது மகவோடுங்கூடிய் தன் மந்தியைப் போற்றி உதவுதலாகிய கடப்பாட்டுணர்வு. அஃதன்றித் தன் புல்னிச்சையொன்றே கருதுமாதலின், கல்லாக் கடுவன்’ என்றனர். மடமா மந்தி. இளமைப் பருவத்துக் கருமுக மந்தி; பெரிய மந்தி. மான வன்பறழ் குலத்தொழில் பயிலாத வலிய குட்டி. கோடு - மலேயுச்சி. ஆடு மழை. இயலும் மேகம், ஒளிக்கும்-ஒளித்து மறையும். இனியன கொள்ளலை . இனி அத்தன்மையான அன்புச் செயல்களை மேற்கொள்ளா திருப்பாயாக. இனி என கொள்ளலை எனவும் பாடம்; இனி என் சொற்களை ஏற்றுக்கொள்வாய் அல்லை என்பது பொருள். நார்-அன்பு. ஈரம் - காதலன்பு. சென்னெறி.- செவ்விதான நெறி; செல் நெறி எனக் கொள்ளின் செல்லும் ஒழுகலாறு எனக் கொள்க. வழாஅ - வழுவாத; வாழா என்று பாடம் கொள்ளின் அந் நெறிப்படி வாழாத என்று கொள்க சான்ருேன் - சால்பினன். - விளக்கம் : ஆன்ருேர் சென்னெறியானது பலரறியக் கோடலும், களவினைக் கடிதலும். அந் நெறிப்படி வாழான் எனவே, அவன் அன்பிலன், ஒதுக்கத் தக்கவன் என்றதாம். ஊரலரால் நாம் வேதனையுறுவோம்; அவன் பிரிவால் நீயும் கலங்கி நெஞ்சழிவாய்; இவற்றைக் கருதாது களவிற் பெறும் இன்பமே நாட்டமாகி வரும் அவன் சால்பிலன் என்கின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/81&oldid=774772" இலிருந்து மீள்விக்கப்பட்டது