பக்கம்:நற்றிணை-2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* , o, íg - 3' ø ീ8 இ) . ത്', o: **) .كما بيني 78 ޘާޝަ!ނީީ நற்றிணை நெளிவுரை . f மணந்து கொள்வாயாக எனக் குறிப்பாகக் கூறினள் என்று கொள்க. உள்ளுறை : யானையின் ஈரினம் தலைவனும் தலைவியு மாகவும், குழையத் தீண்டி’ என்றது, அவர் இயற்கைப் புணர்ச்சியிற் கூடியதைக் குறித்தத்ாகவும், வாழையை வெறுத்து' என்றது, மீளவும் களவுறவை வெறுத்துவிடலே தக்கது எனவும், சிறுகுடி அலற என்றது, அலவற் பெண்டிர் நடுங்கி வாயடங்குமாறு செய்து எனவும், பல்வின் பழம் மிசையும் என்றது, வரைந்து கொண்டு இல்லறம் நிகழ்த்தி இன்பம் துய்ப்பாயாக எனவும் உள்ளுன்ற பொருளாகக் கொண்டு கூறினளாகக் கொள்ளுக. 233. நாருடை நெஞ்சத்து ஈரம்! பாடியவர்: அஞ்சில் ஆந்தையார். திண்ை: குறிஞ்சி. துறை: வரையாது நெடுங்காலம் வந்தொழுக, 'இவள் ஆற்ருள்' என்பது உணர்ந்து சிறைப்புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது. ((து. வி.) வரைந்து கொள்ளற்கு முற்படாதவளுகத் தலைமகன் நெடுங்காலம் வந்து களவு ஒழுக்கத்திலேயே நீடித் திருப்பான் ஆகின்ருன். இது நீடிப்பின் இனியும் தலைவி ஆற்ருள் எனக் கருதிய தோழி, தலைவன் கேட்டுத் தெளியு மாறு, தலைவியிடத்தே சொல்லுவாளேபோல இவ்வாறு கூறுகின்றனள்.) கல்லாக் கடுவன் நடுங்க முள்ளயிற்று மடமா மந்தி மாணு வன்பறழ் கோடுயர் அடுக்கத்து ஆடுமழை ஒளிக்கும் பெருங்கல் நாடனே அருளினை யாயின், இனியன கொள்ளல மன்னே! கொன்னென்று 5 கூறுவன் வாழி தோழி! முன்னுற நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி ஆன்ருேர் சென்னெறி வழாஅச் சான்ருேன் ஆதல்கற் கறிந்தனதெளிமே! தெளிவுரை : தோழி! நீயும் நெடிது வாழ்வாயாக! தன் னுட்ையதான தொழிலையன்றி வேறு தொழிலைக் கல்லாத கடுவன் நடுங்குமாறு, முட்போன்ற கூர்மையான பற்களைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/82&oldid=774773" இலிருந்து மீள்விக்கப்பட்டது