பக்கம்:நற்றிணை-2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 81 குன்றின் தோன்றும் குவவுமணல் ஏறிக் கண்டனம் வருகஞ் சென்மோ தோழிதண்தார் அகலம் வண்டிமிர்பு ஊதப் படுமணிக் கலிமா கடைஇ நெடுநீர்ச் சேர்ப்பன் வருடம் ஆறே. 10 தெளிவுரை : தோழி: வலிமையான அலைகளாலே மோதப் பட்ட, சருச்சரை பொருந்திய வளைந்த அடியை உடைய தும், ஆராயப்பட்ட வாளின் வாய்போல விளங்கும் முள் ளமைந்த இலைகளை உடையதுமான தாழையின் கண்ணே. யுள்ள, பொன்போலும் அழகிய பூந்தாதின் மணமானது, புன்னையின் மலரோடுஞ் சேர்ந்து கலந்தபடி கமழுகின்ற தன்மையுடையது, பலவாகிய பூக்கள் உடையதான கானற் சோலை. அவ்விடத்தே, பகற்குறிக்கண் வந்து நலன் நுசர்ந்து நம்முடைய மெய்யிடத்திருந்த கவினைச் சிதையச் செய் தவகைத் தலைவன் பிரிந்து போயினன். ஆயினும், தண்ணிய தாரணிந்த மார்பிடத்தே வண்டுகள் மொய்த்துத் தேன் உண்டபடி இருக்க, ஒலிக்கும் மணிபூண்ட செருக்கிய குதிரை களைச் செலுத்தியபடி, நெடிய நீரையுடைய நெய்தல் நிலத் தானகிய நம் தலைவன் வரைவொடு வருகின்றதனை குன்றுபோலத் தோன்றுமாறு மணல்குவிந்த மேடு, களின் ம்ேலேறி நின்று யாமும் கண்டு வருவதற்குச் செல்வோமா! - சொற்பொருள் : உரவு வலிமை; பொருத - மோதிய. பிணர்படு - சருச்சரை பொருந்திய தடவு - வளைந்த, அரவு வாள் - வாளரம். பொன்னேர் தாது - பொற்றுகள் போலத் தோன்றும் மகரந்தத் துகள்கள். கானல்: என்றது கானற் சோலையினை. குவவு மணல் - குவிந்த மணல்மேடு. அகலம் , மார்பு. கலிமா - செருக்குடைய குதிரை. சேர்ப்பன் . நெய்தல் நிலத் தலைவன். - விளக்கம் : தாழைப் பூவின் மணம், புன்னைப்பூவின் மணத்தோடு சேர்ந்து கம்ழும் பலவாகிய பூக்களையுடைய கானல்’ என்றது, அதுவும் மணம் பெற்றுத் திகழ்ந்த அழகினை வியந்ததாம். அவ்விடத்தே வாய்த்த பகற்குறிக் கண் தலைவனும் தலைவியும் இன்புற்றனர் என்க. அவன் தலையளியால் அவளது எழில் புதுப் பொலிவு பெற்றது. எனினும், அவன் வரைவொடு வைத்துப் பிரிய, அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/83&oldid=774774" இலிருந்து மீள்விக்கப்பட்டது