பக்கம்:நற்றிணை-2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை ۶ہل وَبر 88 f 239. இவ்வூர் என்னுகுமோ? பாடியவர் : குன்றியனர். திணை : நெய்தல். துறை : தோழி தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது. ((து. வி) களவொழுக்கத்துத் தலைமகன் ஒர்புறத்தே வந்து மறைந்திருப்பதை அறிந்த தோழி, தலைவியை விரைய வரைந்த வருதற்கு அவனைத் தூண்டக் கருதிய வளாய்த், தலைவிக்குச் சொல்வாள் போல, அவனும் கேட்டு உணருமாறு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.) ஞான்ற ஞாயிறு குடமலை மறைய மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் இனிதுபெறு பெருமீன் எளிதினின் மாறி அலவன் ஆடிய புலவுமணல் முன்றில் காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின் 5 ஆய்மணி பொதியவிழ்ந் தாங்கு நெய்தல் புல்லிதழ் பொதிந்த பூத்தப மிதிக்கும் மல்லல் இருங்கழி மலிநீர்ச் சேர்ப்பற்கு - அமைந்து தொழில் கேட்டன்ருே இலமே முன்கை வார்கோல் எல்வளை உடைய வாங்கி 10 முயங்கெனக் கவிழ்ந்த இவ்வூர் எற்ரு வதுகொல், யாம் மற்ருென்று செயினே? தெளிவுரை : மேலைத்திசையிலே சாய்ந்து வீழ்கின்ற ஞாயிருனது, மேலை மலைக்குப் பின்கைச் சென்று மறைய வும், இருள்மயங்கிய மாலைப்பொழுதிலே, கள்ளைக் குடித்த தேைல மயக்கங் கொண்டவரான பரதவர்கள், பகற் ப்ோதிலே வருத்தமின்றிப் பெற்ற பெரிய மீன்களை எளிய விலைகட்கே விற்று விடுவர். ஞெண்டுகள் விளையாடியபடி யிருக்கும் புலவு நாற்றத்தையுடைய மணல் பரந்த முன்றில் களைக் கொண்டதும், காண்பார்க்கு விருப்பந்தருவதுமான சிறு குடியின் கண்ணே, செல்வதற்குரிய ஒழுங்குபட்ட வழி யினிடத்தே, அழகிய நீலமணியின் குவியலை விரித்து ப் பரப்பி வைத்தாற்போலே நெய்தல் மலர்களின் புறவிதழ்களாலே மூடப்பெற்ற பூக்கள் கெடும்படி மிதித்தபடியே, தத்தம் இல்லங்களைநோக்கியும்அவர் செல்வர். வளப்பத்தையுடைய கரிய கழிபொருந்திய நீர்மலிந்க அத்தகைய நெய்தல் நிலக் தலைவனுக்கு, யாமும் மனமொத்தவராய் இருந்தேயாய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/92&oldid=774784" இலிருந்து மீள்விக்கப்பட்டது