பக்கம்:நற்றிணை-2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நற்றிணை தெளிவுரை சிறுகுழி எனவரும் அகநானூற்றுச் செய்யுட்பகுதியாலும் அறியலாம் (அகம் 155). கானம் திண்ணிய மலைபோன் றிசினே' என்பதற்கு, முல்லை நிலத்ததாகிய அப் பாலை தானும் மலைபோலத் திண்மைபெற்றுப் போயிற்று' எனவும், 'யானை இன நிரை வந்து வெளவுதலால் அது குன்றுகளை யுடைய மலைப்பகுதி போலத் தோன்றலுறும் எனவும் கொள்ளலாம். இறைச்சி: 'ஆனிரை உண்பிக்க வேண்டிக் கோவலர் கூவல்ருகே பறித்த பத்தலிலே நிரம்பியிருந்த நீரையும் யானை யினம் கவர்ந்து உண்ணு நிற்கும்’ என்றனள். அவ்வாறே தலைவனலே துய்த்தற்கு உரியதான என் நலனையும் பசலை யானது கவர்ந்துண்ணும் என்றனளாம். மெய்ப்பாடு, அழுகை, பயன், அயாவுயிர்த்தல். இனி, இரண்டாவதாகக் கூறப்பட்ட, நெஞ்சில்ை பொருள் வலிக்கப்பட்டு ஆற்ருளுகிய தலைமகன் சொல்லியது என்னும் துறைக்கு ஏற்பப் பின்வருமாறு பொருத்திப் பொருள் கொள்ளல் வேண்டும். "நெஞ்சமே! இக் குறுமகளை முயங்கித் துய்த்துப் பெறு கின்றதான இன்பத்தினை வேண்டாவென வெறுத்து நீக்குத லாலே, இவள்தான் துயிலைப் பெருதாளாக வருந்தித் துன் புற்று நலிவாளாயிலும், யான் செல்லுதற்குரிய காணமோ வெம்மை மிக்கதாய், மலைபோலும் பேரச்சத்தைத் தரு கின்றதே! அதனைப் படைத்தவன், தானும் மெத்தென அத னிடைச் சென்று நலிவாகை' என்று தலைமகன் கூறியதாக உரைத்துக் கொள்ளல் வேண்டும். 'யான் துய்த்தற்குரிய அவளது எழில் நலத்தினை அப் போது பசலையானது உண்டு ஒழித்துவிடும்’ என்று சொன்னதாக, இறைச்சிப் பொருளும் அதற்கேற்பக் கொள்க. இதன் பயன், தலைவன் பிரிவைக் கைவிட்டு இல்லத் திலேயே தங்கிவிடுபவன் ஆவான் என்பதாம்; இதனல் அவள் மனத் துயரம் அகலும் என்பதும் கொள்க. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/96&oldid=774788" இலிருந்து மீள்விக்கப்பட்டது