பக்கம்:நற்றிணை-2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Y *(ベレry) நற்றிணை தெளிவுரை /۸ 95 * • اه مه 242-கார் தொடங்கின்றே! பாடியவர் : Glg೭ பேதைப் பெருங்கண்ண்ஞர். திணை :முல்லை. துறை:-வினைமுற்றி மறுத்தராநின் தலைமகன் கார் கண்டு பாகற்குச் சொல்லியது. (து. வி.) வினைமுடித்து மீள்கின்ற தலைவன், தலைமகள் பாற் கொண்டுள்ள காதன்மை மேலெழ, விரையத் தேரைச் செலுத்துமாறு தன் பாகனுக்குக் கூறுவதுபோல அமைந்த செய்யுள் இது.) இலையில் பிடவம் ஈர்மலர் அரும்பப் புதலிவர் தளவம் பூங்கொடி அவிழப் பொன்னெனக் கொன்றை மலர மணியெனப் பன்மலர்க் காயாங் குறுஞ்சினை களுலக் கார்தொடங்கின்றே காலை வல்விரைந்து 5 செல்க பாகரின் தெரே! உவக்காண் கழிப்பெயர் களரில் போகிய மடமான் -- விழிக்கண் பேதையொடு இனனிரிங் தோடக் காமர் நெஞ்சமொடு அகலாத் தேடுஉ கின்ற இரலை ஏறே! 10. தெளிவுரை : பாகனே! இலையுதிர்ந்திருந்த பிடாமரங் கள் எல்லாம் குளிர்ந்த மலர்களைத் தருகின்ற அரும்புகளை முகிழ்த்தன. புதர்மேல் ஏறிப் படர்கின்ற முல்லைக் கொடி யில் பூக்கள் மலர்ந்தன. கொன்றைகள் பொற்காசுகளைப் போன்ற பூக்களைப் பூத்தன. நீலமணியின் நிறத்தைப் போன்ற பலவாய மலர்களை யுடையவாய்க் காயாவின் குறுகியவான கிளைகள் விளக்கம் பெற்றன. காலைப் பொழு திலேயே மழையும் பெய்யத் தொடங்கியுள்ளது. கழிநீர் பெருகிப் பரவுகின்ற களர் நிலத்திலே போகிய இளைய பிண்ைமானைது, மருண்டு விழித்தலையுடைய கண்களைக் கொண்ட தன் குட்டியின் பின்னே, தன் இனமாகிய ஏனைய மான் கூட்டத்தினின்றும் நீங்கி வேறிடத்தை நோக்கி ஓடிப் போகின்றது. அப் பிணையின்மீது விருப்பமிக்க நெஞ்சத் தோடு, தானும் இனத்தினின்றும் நீங்கிச் சென்றதாய், அதனைத் தேடியபடி நிற்கின்ற ஆண்மானையும் உவ்விடத்துக் காண்பாயாக! ஆதலின், நின் தேர்தானும் மிக விரைந்து செல்வதாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/97&oldid=774789" இலிருந்து மீள்விக்கப்பட்டது