பக்கம்:நற்றிணை-2.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 நற்றிணை தெளிவுரை திலே பல இதழ்களையுடைய பூவைப்போலும் மையுண்ட எம் கண்கள் நீரினைச் சொரியும். நிலைபேறில்லாத பொருள் மேற்கொண்ட உள்ளப் பிணிப்பினலே நம்மைப் பிரிந்து சென்ருேர் நம் காதலர். அவர்தாம் நம்மைப்பற்றி நினைக்கவே மாட்டாரோ? சொற்பொருள் : கொடுஞ் சிறை - வளைந்த தன்மை யுடைய சிறை; சிறை-இறக்கை. அளிய தாமே கொடுஞ் சிறைப் பறவை என்பது குறுந்தொகை (92). வரி-வரிகள்; "புள்ளடி பொறித்த வரி' என்றது, நீர் வற்றியபோது, மீன் பற்றுதற் பொருட்டுக் குருகுகள் நடந்து சென்ற சுவடு பதிந்த சேரானது, காய்ந்ததும் கோடு கோடாய்க் கோல மிட்டாற்போலத் தோன்றும் என்றதாம். தலை-இடம். ஈரயிர்-குளிர்ந்த நுண்மணல். உளர்பு-வீசியபடி. வேழம். வேழக் கரும்பு. மழை-மேகம். பையுள்-வருத்தம். பொருட் பிணி பொருள் மேற்கொண்ட உள்ளப் பிணிப்பு: பொருட் காதலாகிய நோய் எனினும் ஆம். விளக்கம்: உடனுறைந்து இன்புறுதற்குத் தலைவனும் தலைவியுமாகிய இருவரும் பெரிது விருப்புறுங்காலம் நடுக்கந் தரும் வாடைக்காலம். ஆதலினல், அதனைச் சிறப்பாக எடுத்துக் கூறினுள். வேழம் கொறுக்கச்சி எனவும் வேழக் கரும்பு எனவும் சொல்லப்படும். நிலையில்லாத பொருளின் மேற்கொண்ட பிணிப்பாலே, நிலைபேருன இன்பத்தைக் கைவிட்டாராய் அகன்று போயினவர் அவர். இதேைல அவர் அறநெறிப்பட ஒழுகலை மறந்தார்; நமக்கும் இனி அருள்வாரல்லர் என்று கூறி வாடி வருந்துகின்ருள் தலைவி. மேகத்திரள்களுக்கு இடையே தோன்றியும் மறைந்தும் காணப்படுகின்ற ஞாயிற்றைப்போல, அவரும் நமக்கு அணி செய்தும் பிரிந்து நலியச்செய்தும் வருத்துகின்றவரேயல்லா மல், நிலையான இன்பத்திற்கு உரியவராக விளங்குவாரல்லர் எனக் கூறி நொந்ததாம். இதனைக் கேட்கின்றவன், மேலும் காலம் தாழ்க்கா தாளுய், அவளை மணந்து கொள்ளும் முயற்சிகளை மேற் கொள்வான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/98&oldid=774790" இலிருந்து மீள்விக்கப்பட்டது