பக்கம்:நலமே நமது பலம்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


98 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

எனக்கும் விபத்து ஏற்பட்டது. ஆனால் அழிவிலிருந்து விரட்டிக் கொண்டிருக்கும் மரணத்தில் இருந்து தப்பித்துக் கொண்டேன்.

அதற்குப் பிறகு கொஞ்சங்கூடப் பயப்படாமல் குலைந்து போகாமல், கலங்கிப் போகாமல், காரியங்கள் செய்ய

ஆரம்பித்தேன்.

பத்து மைல் தூரமுள்ள வடலூருக்கு ஒரு ஆட்டோவில் டிரைவரை அழைத்துப் போய் மாவுக் கட்டுப் போட்டேன். பக்கத்தில் உள்ள டாக்டர் வீட்டுக்கு என் மனைவியை அழைத்துப் போய், அடிபட்ட காலுக்கு மருத்துவம் செய்வித்தேன். நெய்வேலி என்.எல்.சி. விளையாட்டுக் கட்டப்பாட்டுக் கழகத்திற்குப் போய், எனது நண்பர்களான திருகே. சோமசுந்தரம், திரு. செந்தில்வேல் அவர்களிடம் கூறி, என் வேனை எடுத்து வரச் செய்து மெக்கானிக் செட்டிற்குக் கொண்டு போகச் செய்தேன்.

இவ்வளவு காரியம் நடத்தி முடிப்பதற்கு இரவு 10 மணி ஆயிற்று. அதற்குப் பிறகு சாப்பிட்டு விட்டு உறங்கிப்

போனேன்.

இந்த விபத்தில் நான் நேரடியாகப் பாதிக்கப்பட்டு, பயங்கரமானதாகப் பெற்ற விபத்தைப் பற்றி, மிகவும் சுருக்கமாக உங்களுக்கு விளக்கிக் கூறினேன்.

எனது முதல் வாழ்க்கை முடிந்து போய், தப்பிப் பிழைத்து இப்போது இரண்டாவது பிறப்பெடுத்து வாழ்ந்து கொண்டு, இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காக, புதிய பல நூல்களை எழுதிக் கொண்டிருக்கிறேன். இசைப் பாடல்கள் அடங்கிய கேசட்டுகளைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். நல்ல