பக்கம்:நலமே நமது பலம்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 OO டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அதனால்தான் விபத்தை யாருமே விரும்புவதில்லை. ஆனாலும் ஏற்பட்ட விபத்தை விட்டு யாருமே தப்பவும் முடிவதில்லை.

வருமே என்று பயப்படலாம், அது தவறில்லை.

ஆனால் விபத்தில் சிக்கிக் கொண்டான பிறகு விசனப்படுவதால் மட்டுமே, வெளியேறி தப்பி வந்துவிட முடியாது. வியாகூலப்படுவதால் மட்டுமே துன்பத்தைத் துடைத்து விட முடியாது. -

துன்ப நேரத்திலும் துணிந்து நிற்க வேண்டும். அதில் ஏற்பட்ட அழிவும் இழப்பும் ஒரு நல்ல அனுபவம் என்றே கருத வேண்டும். அந்த அவலச் சூழ்நிலையைப் பொருத வேண்டும். போராட வேண்டும். போராடி வெளியே வரவேண்டும். வெற்றி பெற வேண்டும்.

விபத்தால் ஏற்படுகிற பொருள் இழப்பு உடல் இழப்பு இவற்றைவிட மன பாதிப்பு இருக்கிறதே, அது பொல்லாதது.

ஆகவே, நமக்கு ஏற்படுகின்ற ஆபத்தை, விபத்தை நாம் சமாளிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வது. சதிகாரக் சூழ்நிலைகளை சமர்த்தாக சந்திக்கும் சாதுர்யத்தை அளிக்கும் என்ற நம்பிக்கையில் இங்கே உங்களிடம் தருகிறேன்.

வி+பத்து என்பது விபத்தாகும். வி என்றால் அறிவு என்றும் பிரிவு என்றும் பொருள் கூறுகிறார்கள்.

பத்து என்றால் பல அர்த்தங்களில் பிரேதச் சடங்கு என்றும் ஓர் அர்த்தம்.

உயிரில் பிரிவு பெற்ற உடலை பிரேதம் என்கிறோம்.

அதற்கான, அர்த்த பூர்வமான ஒரு பிரிவு வேலைக்குத்தான் விபத்து என்று பெயர்.