பக்கம்:நலமே நமது பலம்.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


102 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

11. மரணமும் - ஏற்கிற மனோதிடமும்

விபத்து நேரத்தில் தப்பி உயிர் பிழைப்பது என்பது துரதிர்ஷ்டத்திலும் பெரிய அதிர்ஷ்டமாகும்.

தப்பி உயிர் பிழைத்தாலும் அங்கஹlனங்கள் ஏற்படாமல் இருந்தால், அதிர்ஷடத்திலும் அது பெரிய அதிர்ஷ்டம்தான்.

அங்கம் குறைந்தாலும், உறுப்புகளை இழந்தாலும், வாழ்ந்தாக வேண்டும் என்கிற கட்டாயமான சூழ்நிலை அமைகிறபோது, இழப்பை ஏற்றுக் கொள்கிற மனதிடம் வேண்டும். அந்தச் சங்கட நிலையைச் சந்திக்கும் சகிப்புத் தன்மையும் வேண்டும்.

மரணம் என்கிற சொல் நுண்மையான பொருள் நிறைந்ததான சொல்லாகவே அமைந்திருக்கின்றது.

ம+ரணம் என்று, இந்தச் சொல்லைப் பிரிக்கலாம்.

ம என்றால் எமன் என்றும் காலம் என்றும் பொருள்; ரணம் என்றால் யுத்தம், பகை, போர், காயம் என்றெல்லாம் பல அர்த்தங்கள் உண்டு.

ஆக, மரணம் என்றால் எமனோடு யுத்தம். வாழ்வுடன் போர், காலத்தின் காயம் என்கிற அர்த்தங்கள் மிகுந்த சொற் சுவையும் பொருட் சுவையும் கொண்டதாக இருக்கும்படியாக நமது முன்னோர்கள் அருமையாகப் பெயரிட்டிருக்கின்றனர்.

மரணம் என்றால் என்ன? எப்படி ஏற்படுகிறது?

மரணம் (Death) என்பது, மூளையின் எல்லாவிதமான செயல்பாடுகளும் நின்று போய்விடுகிறபோது அல்லது