பக்கம்:நலமே நமது பலம்.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 1 O3

உயிர்ப்பானது (Life) முற்றிலுமாக அழிந்து விடுகிறபோது ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட இறுதிநிலை நெடுநாள் தொடர்கின்ற நோயால் அல்லது எதிர்பாராது ஏற்படுகின்ற விபத்தால் அல்லது மாரடைப்பால் மற்றும் பலவிதங்களால் விளைந்து விடுகின்றது. -

எது எப்படி இருந்தாலும், ஒரு நெருக்கமான தமது உறவை, ஒவ்வொருவரும் இழக்க நேரிடுகின்றது என்கிற உண்மையைத்தாம், நாம் இங்கே எண்ணிப் பார்க்க வேண்டும்.

பொதுவாக, வீட்டில் இறந்து போகிறவருக்கு அந்தந்த இடத்திற்குப் பொறுப்புள்ள அரசாங்க அதிகாரிகளிடமும்; மருத்துவமனையில் மரித்துப் போனால் மருத்துவம் செய்த மருத்தவரிடமும் இறப்புச் சான்றதிழ் பெற்றுவிட வேண்டும். இந்தச் சான்றிதழ் பின்னாளில் ஏற்படுகின்ற பல பிரச்சனைகளைச் சமாளிக்க உதவும்.

இறப்பினால் ஏற்படுகின்ற தாக்கம், மேலை நாடுகளில் தனிப்பட்ட முறையில் தாங்கிக் கொள்ளப்படுகிறது.

இந்தியா போன்ற நாடுகளில், இந்தத் துக்கம், சமுதாய துக்கமாக அல்லது ஊர் துக்கமாகவே ஏற்றுக் கொள்ளப் படுகிறது.

இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஏற்படுகின்ற துக்கம், மன அதிர்ச்சியையும், உடலில் உணர்வில் உணர்ச்சியற்ற தன்மையையும் கொடுக்கின்றது. அதனால், ஆறாகப் பெருகும் கண்ணிர், ஆற்றாது அழுது புலம்பல், இப்படி, பல நாட்கள் வாரங்கள் கழிகிறபோது, அந்தக்