பக்கம்:நலமே நமது பலம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

காலத்தின் காயத்தால் ஏற்பட்ட மனப்புண் கொஞ்சம் கொஞ்சமாக ஆறத் தொடங்குகிறது.

அதிகத் துக்கமும் அழுகையும் ஆற்றாமையும் தொடர்கிற போது, அவருக்கு அவளுக்கு ஆறுதல் தேவைப்படுகிறது. அன்பான உபசரிப்பு, வேண்டிய நேரத்தில் பசியாற்றுகிற உணவு கிடைக்கும் ஒரு பாதுகாப்பு உண்டு என்று உணரச் செய்யும் நேசிப்பு. பொருளாதார விஷயத்திலும் பாதிப்பு இல்லை என்ற நினைப்பு ஏற்பட, உற்றவர்களும் மற்றவர்களும் உதவ வேண்டியது தலையாய கடமையாகும்.

விபத்தில் உயிர்போனால் வேதனை, விசாரம், வியாகூலம், வாழ்விலே இருள் என்கிறோம்.

உயிர் பிழைத்துக் கொண்டவர்களுக்கு, உடற்காயம் ஏற்பட்டு விடுகிறபோது, இரத்தம் ஒழுகி ஆறாக ஓடி, உடல் தளர்ந்து சாய்ந்து போகிறபோது; சமாளித்து பாதிக்கப் பட்டவர்களைப் பக்குவமாய் பாதுகாத்திடும் கலையே தனிக்

கலைதான. -

முடிந்தவரை ஒவ்வொரு காயத்தையும் காப்பாற்றி விடுகிற முதல் உதவி முறைகளை அந்த ஆத்மார்த்தமான

கலையை இங்கே நாம் தொடர்ந்து காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/106&oldid=690914" இலிருந்து மீள்விக்கப்பட்டது