பக்கம்:நலமே நமது பலம்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் - 1 O7

7. விபத்துக்கு ஆளாகிப் படுத்துக் கிடப்பவர்களை, எழுந்து உட்காருங்கள், நடக்க முயலுங்கள் என்று வற்புறுத் தாமல், படுத்திருக்கும் அந்த நிலையிலேயே படுக்கச் செய்ய வேண்டும். -

8. சில சமயங்களில் அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை கூட தேவைப்படலாம். ஆகவே, பாதிக்கப்பட்டவருக்கு உணவோ, தண்ணிரோ அல்லது ஏதாவது பானமோ அப்போது தரக்கூடாது.

9. விபத்துக்கு ஆளானவர், மயக்கமடைந்து கிடந்தால்,

தலையை (முகத்தை) பக்கவாட்டில் இருப்பதுபோல திருப்பி வைக்கவும். அப்படிச் செய்கிறபோது, இரத்தத்தால் அல்லது எச்சிலினால் அல்லது வாந்தி எடுக்கும் போது வாந்தியால் தொண்டையடைத்துக் கொண்டு (Choking), மூச்சு முட்டுகிறதுநிலையும் ஏற்பட்டு விடலாம். செயற்கை சுவாசம் தேவைப்பட்டால் செய்யலாம்.

இதற்கான விளக்கம் செயற்கை சுவாசம் என்ற பகுதியில் காண்க.

10. பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதிய சுவாசம் வேண்டும் என்பதற்காக, காற்றோட்டம் இருப்பதற்காக ஏற்பாடு செய்ய வேண்டும். சுற்றிக் கூடி நின்று வேடிக்கை பார்க்கின்ற கூட்டத்தை, அப்புறப்படுத்தி விட வேண்டும்.

சுவாசப் பாதைகளான மூக்கு, வாய், தொண்டைப் பகுதிகளில் தடையில்லாமல் காற்று சென்றுவரும் (Free) வண்ணம், அவரைப் படுத்திருக்கச் செய்ய வேண்டும்.

11. பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதிய மருத்துவ சேவை செய்வதற்கு முன், அவரது உடல்நலம், அவருக்குள்ள நோய்கள் பற்றி அறிந்து கொள்வது நல்லது. நீரிழிவு நோய், இதய நோய் போன் ற ஏதாவது துன்புறுத்தும் பல