பக்கம்:நலமே நமது பலம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் - 9

நலமே நமது பலம்

1. உடல் நலம்! ஒரு விளக்கம்!!

நல்லதும் நலமானதும்:

இறைவன் ஓர் இனிய உலகைப் படைத்துத் தந்திருக்கிறான். இதில் வாழும் எல்லா உயிரினங்களையும் நல்லதொரு வாழ்வை - நிதம் வாழும் வண்ணம், நேர்த்தியான வகையிலே நல்கியிருக்கிறான்.

நல்லதொரு வாழ்வு என்பது நலமான வாழ்வு என்பதுதான். இந்த நலமான வாழ்வைப் பெறவே எல்லா உயிரினங்களும் உவந்து எழுந்து முயல்கின்றன. அவற்றிலே முதன்மையான இனம், மனித இனம். ஆமாம். இது ஒரு மாண்புமிகு மகோன்னதமான மரியாதைக்குரிய இனமாகும்.

மனிதகுல விருப்பம்:

மனிதர்கள் எல்லோருமே நலமான வாழ்வையே நாளும் பெற விரும்புகிறார்கள். வேட்கை கொள்கின்றார்கள். அந்த எண்ணத்தையே வேள்வியாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

நலம் உள்ள வாழ்வு என்பதை நோய்களில்லாத வாழ்வு என்றே நம்புகின்றார்கள். நோய் இல்லாத உடல்தான் பலம்

நிறைந்தது. வளம் மிகுந்தது என்று உறுதியுடன் பேசுகின்றார்கள்.

உண்மைதான். உடல் நலத்துடன் இருப்பதே உயர்தரமான இன் பத்தின் ஊற்றாக விளங்குகிறது. நலமில்லாத உடல், நோய்களின் கூடாரமாக, துன்பங்களின் சத்திரமாக மாறிக் கொள்கிறது. நலம் குன்றிய உடலோ, இந்த உலகத்தில் எதையுமே, இயல்பாக ஏற்றுக் கொள்வதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/11&oldid=690918" இலிருந்து மீள்விக்கப்பட்டது