பக்கம்:நலமே நமது பலம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O8 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

நோய்களுக்கு அவர் சொந்தக்காரராக இருக்கலாம். ஆகவே, நோய் பார்த்து உதவுவதும் அவசியமாகிறது. இதற்காக அவர்களைக் கேட்டு அறியலாம். ஆனால் தொந்தரவு செய்யக்கூடாது.

12. அவரது சட்டைப் பையில் அல்லது கைப்பையில் அவரது நோயைப் பற்றி, அல்லது அவரது உடல்நிலை பற்றி குறிப்புச் சீட்டு இருந்தாலும், அதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

13. முடிந்தவரை பாதிக்கப்பட்டவர்களுக்குச் செளரியமான சூழ்நிலையையே செய்துதர வேண்டும். தேவைப்பட்டால், அவர்கள்மேல்வெயில்படாதவாறு அல்லது குளிர்வாட்டாதவாறு பார்த்துக் கொள்ளவும்.

14. அணிந்திருக்கும் ஆடைகள் இறக்கமாக இருந்தால் தளர்த்தி விடவும். இடைவார் (Belt) ஏதாவது அணிந்திருந் தாலும், அதைப் பிடித்து இழுக்காமல் மெதுவாகப் பதமாகக் கழற்றவும். இல்லையேல் உடைந்திருக்கும் எலும்புகள் மேலும் சிதைவு அடைந்துபோய் விடலாம்.

15. பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும்படி பேசலாம். விபத்து நடந்தது எப்படி? என்ன விளைவுகள் ஏற்பட்டன? அதற்குப் பரிகாரமாகச் செய்யப்படுகிற முயற்சிகள் பற்றியும் விளக்கி, அவர்களைத் தைரியமாக இருக்கும்படிக் கூறவேண்டும்.

16. அவர்கள் அதிர்ச்சி (Shock) அடையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கடுமையான காயங்கள், எலும் பு முறிவுகள் ஏற்படுத்திய அதிர்ச்சியால், அவர்கள் அதிகமாகப் பயப்படுவார்கள். பலஹlனமாக இருப்பார்கள். மனம் கலங்கிக் கிடப்பார்கள். சில சமயங்களில் தாகத்துடன் இருப்பார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/110&oldid=690919" இலிருந்து மீள்விக்கப்பட்டது