பக்கம்:நலமே நமது பலம்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 109

17. சில விபத்து நிகழ்ச்சிகளில் பாதிக்கப்பட்டவர் களுக்கு அதிர்ச்சியால் மூச்சடைப்பு ஏற்படும். தோல் பகுதியும் வெளுத்துப் போய்விடும். நாடித் துடிப்பு அதிகமாகும். சில சமயங்களில் நாடித் துடிப்பு மந்தமாகிவிடும். (Faint) சுவாசமும் தாழ்ந்து ஒழுங்கற்ற முறையில் நடக்கும்.

இப்படிப்பட்டவர்களுக்குச் செய்கிற முதலுதவியானது, அறிவார்ந்த முறையில், அவசரம் இல்லாமல் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரை, கால்கள் சற்று உயர்ந்து இருப்பது போல உட்கார வைக்கலாம். இல்லையேல் யார் மேலாவது சாய்ந்திருப்பது போலவும் படுக்க வைக்கலாம்.

18. பாதிக்கப்பட்டவர் உடலுக்குப் போதிய வெப்பம் தேவைப்படும். அதனால் தேவைப்பட்டால் போர்வையால் மூடி வைத்து உதவலாம்.

19. இவ்வளவு உதவியும் செய்து கொண்டிருக்கும் போதே, மருத்துவருக்கு யாரையாவது அனுப்பி மருத்துவரை அழைத்து வரச் செய்யலாம். நீங்கள் மட்டும் தனியாக இருக்கும் நிலை இருந்தால் தகுந்த நேரம் பார்த்துத்தான் செல்ல வேண்டியிருக்கும். அவர்களுக்குத் தைரியம் அளித்த பிறகு செல்வதுதான் சிறப்பாக அமையும்.

20. மருத்துவமனைக்கு நீங்கள் கொண்டு போய், கூட இருக்கும் சூழ்நிலை அமைந்தால், நீங்கள் இதுவரை செய்த தென்ன, என்பதுடன் அவருக்கு விபத்து ஏற்பட்ட சூழ்நிலை பற்றியெல்லாம் மருத்துவரிடம் தெளிவாகக் கூறவேண்டும்.