பக்கம்:நலமே நமது பலம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 111

அதைத்தவிர மற்றவைகளுக்காகக் கொண்டு செல் வதில் காயங்களுக்கு ஏற்பவே கருத்தில் கொள்ள வேண்டும்.

3. உங்களுடன் மற்றவர்களின் உதவியையும் கேட்டுப் பெற்றுக் கொள்வது பத்திரமாகத் தூக்கிச் செல்ல உதவும்.

4. சாலையில் ஆட்டோ ரிக்ஷா, மோட்டார் சைக்கிள் போன்றவற்றில் ஏற்படுகிற சாலை விபத்துகளின்போது, மற்ற வாகனங்கள் அந்தப் பக்கம் வந்து விடாமல் முதலில் தடுத்துவிடும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

5. விபத்துக்களில் காயம்பட்டவர்களை அப்புறப்படுத்து கிற முறைகள் எல்லாம், காயங்களின் பயங்கரத்திற்கேற்ப, உதவிக்கு வருகிற ஆட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, எவ்வளவு தூரத்தில் மருத்துவமனை இருக்கிறது என்பதற் கேற்ப, போகும் சாலைப் பகுதிகளின் தகுதிக்கேற்பவே

அமையும்.

6. இவற்றையெல்லாம், எண்ணிப் பார்த்து முடி வெடுத்து, அவர்களைத் தூக்கிச் செல்கிற சமயத்தில், அடிக்கடி அவர்கள் உடல்நிலை, சுவாசத்தில் ஏற்படும் நிலை போன்றவற்றைக் கண்காணித்துக் கொண்டே வரவேண்டும். மூர்ச்சை அடையாமல் இருக்கிறாரா என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

7. ஒருவரே தூக்கிச் செல்வதா? இருவர் சேர்ந்தால்தான் முடியும் என்றால் சேர்த்துக் கொள்வதா? படுத்தபடிதான் தூக்கிச் செல்ல முடியும் என்றால் தூக்குக் கட்டில் (Stretcher) கிடைக்கும் வாய்ப்பு உள்ளத்ா? என்பதையெல்லாம் ஏற்படுகிற காயங்களின் தன்மையை வைத்தே ஏற்பாடு செய்ய வேண்டும்.

8. தொட்டில் போல தூக்குதல் (Cradle lift) காயம் பட்டவர் கனமில்லாதவராக இருந்தால், மருத்துவ மனையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/113&oldid=690922" இலிருந்து மீள்விக்கப்பட்டது