பக்கம்:நலமே நமது பலம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

அதிக தூரம் இல்லாமல் அருகிலேயே இருந்தால், ஒருவரே தூக்கிச் செல்ல முடியும். முழங்காலுக்குக் கீழே வலது கையையும் இடுப்புக்கு மேற்புற முதுகுப் பகுதியில் இடது கையையும் வைத்து தூக்கிச் செல்லும் முறை இது. (விபரங்களுக்குப் படங்களைப் பார்க்கவும்).

9. காயம் பட்டவரைக் கைகளால் தூக்காமல் இவரைத் தூக்கி வலது புற அல்லது இடது புறத் தோளில் சுமத்திக் கொள்ளுதல். அவரது இடுப்புப் பகுதி, அடிவயிற்றுப் பகுதி முகத்துக்கு முன்பாக தோள் பகுதியில் இருக்க, முகமானது முதுகில் சரிந்திருக்க, ஒரு கையால் இரண்டு முழங்கால் களையும் மற்றொரு கையால் வசதியான இன்னொரு கையையும் பிடித்தபடி தூக்கிச் செல்ல வேண்டும்.

10. விபத்துக்கு உள்ளானவர், கொஞ்சம் கனமானவராக இருந்து, தூக்க முடியாத நிலை ஏற்பட்டால், இரண்டு பேர் சேர்ந்து தூக்க வேண்டும். அந்த இருவரும் ஒருவருக்கொருவர் தமது வலது கையால் மற்றவரது வலது கையையும் மணிக்கட்டு மேற்பகுதியில் பற்றிக் கொள்கிறபோது, நாற்காலியில் அமர்வது போன்ற ஒரு இருக்கை (Position) ஏற்படும். அதன்மேல் அவரை அமரச் செய்து, தூக்கிய இருவரும் பக்கவாட்டிலேயே கால்களை வைத்து நடப்பது போல நடந்து செல்ல வேண்டும்.

11. காயம் பட்டவர் நல்ல உணர்வுடன் தைரியமாக இருந்தால், இரட்டையர்கள் போட்ட கையிருக்கையில் (Four Handed Position) உட்கார வைத்து, அவரது இடது கையால் ஒருவர் தோளிலும் வலதுகையால் மற்றவர் தோளிலும் பற்றச் செய்து, அலுங்காமல் குலுங்காமல் தூக்கிச் செல்ல வேண்டும்.

இருவர் ஆளுக்கொரு பக்கமாக இருந்து தூக்க, மூன்றாமவர் தலைப் பாகத்தில் தலைபாகம் அதிகமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/118&oldid=690924" இலிருந்து மீள்விக்கப்பட்டது